Link copied!
Sign in / Sign up
1
Shares

கொழுப்பு மிக்க உணவுகளை உண்டபின் செய்ய வேண்டியது..!

நம் அன்றாட வாழ்க்கையில், ஏதேனும் சில தருணங்களில் அல்லது சில தினங்களில், சில விழாக்களின் போதோ அல்லது நம்முடைய தனிப்பட்ட விருப்பத்தால் தினசரியாக என கொழுப்பு உணவுகளை உட்கொள்வோம். இவ்வாறு அதிகமாக, அடிக்கடி கொழுப்பு உணவுகளை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல; இரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடும் மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும் எனத் தெரிந்தும் இவ்வுணவுகளை உட்கொண்டு வருகிறோம். 

இவ்வுணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது சற்று கடினமே! ஆகையால், இந்த உணவுகளை உண்டாலும், அது நம்மை பாதிக்காமல் இருக்க நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். அவ்விஷயங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

திரிபலா

கொழுப்பு உணவுகளை உண்ட பின் 1 தேக்கரண்டி திரிபலா சூரணத்தை, மிதமான சூடுள்ள நீரில் கலந்து பருக வேண்டும்; இதனால் கொழுப்பு உணவுகள், விரைவில் செரிமானமடைந்து உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

வால் மிளகு

வால் மிளகின் சூடு மற்றும் காரத்தன்மையால் உடலில், உணவின் மூலமாக சேரும் கொழுப்புகளை உடைத்து நீக்கும் பண்பை இது கொண்டுள்ளது; எனவே 1 தேக்கரண்டி வால் மிளகுப் பொடியை நீர் அல்லது மோரில் கரைத்து குடித்து வர வேண்டும்.

தேன்

தேன், கொழுப்பு உணவுகளை எளிதில் செரிக்க வைக்கவும், விரைவில் கரைக்கவும் உதவுகிறது; எனவே சுத்தமான தேனை மிதமான சூடுள்ள நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இஞ்சி தேநீர்

கொழுப்பு மிக்க உணவுகளை உண்ட பின் இஞ்சி தேநீர் தயார் செய்து உடனே குடிக்க வேண்டும்;  இது செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

நடைப்பயிற்சி

கொழுப்பு உணவுகளை உண்ட உடனே டற்பயிற்சி செய்யக்கூடாது; ஆனால் 10 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால், அமிலங்கள் சுரப்பது விரைவாகி, அது கொழுப்புகளை கரைக்கத் தொடங்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon