Link copied!
Sign in / Sign up
0
Shares

கோடைவிடுமுறையில் பெற்றோரும் பிள்ளைகளும் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள்..!

கோடை விடுமுறை தொடங்கினாலே, பெற்றோர்களுக்கு வெயிலின் கொடுமையை சமாளிப்பதோடு, குழந்தைகளை சமாளிக்கும் மிகப்பெரிய சவாலும் சேர்ந்து கொள்கிறது. கோடை விடுமுறைகளில் இத்தனை நாளாய் படித்துக் களைத்த உங்கள் வாரிசுகள், தங்கள் சேஷ்டைகளை, குறும்புத்தனங்களை, வாலுத்தனங்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்த தொடங்கி விடுவார்கள். 

அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு கஷ்ட காலமான கோடை விடுமுறையி பிள்ளைகளும் பெற்றோர்களும் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத செயல்கள் - விஷயங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

பிள்ளைகளுக்கு:

1. கோடை விடுமுறை நாட்களில், தாமதமாக எழுவது பிள்ளைகளின் வழக்கமாகத் தொடங்கும்; ஆனால் இது சரியானது அல்ல. விரைவில் தூங்கி, சூரியன் உதிக்கும் முன் துயில் எழுவது தான் நல்ல பழக்க வழக்கம். எனவே, பள்ளி நாட்களில் எழுவது போன்றே, வழக்கமான நேரத்திற்கு குழந்தைகள் எழுந்து விட வேண்டும்.

2. உங்கள் அறையில் உள்ள, நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை ஒழுங்குப்படுத்துங்கள்; தேவையற்ற பழைய பொருட்களை அப்புறப்படுத்தி, அறையை, உங்கள் இடத்தை சுத்தப்படுத்துப்படுத்துங்கள். உங்களிடமுள்ள பழைய புத்தகங்களை தகுதியானோருக்கு கொடுங்கள் இல்லையேல் ஏதேனும் நூலகத்திற்கு தானம் அளித்து விடுங்கள். 

3. விடுமுறை நாட்களில் உங்களால் இயன்ற, ஏதேனும் சிறிய சமூக சேவை செய்யுங்கள்.

4. விடுமுறையின் கடைசி நாட்களில், புது வகுப்புக்கான புத்தகங்கள், நோட்டுகளுக்கு நன்கு, அழகாக அட்டைப் போட்டு, லேபிள் ஒட்டி தயார் செய்து வையுங்கள். 

5. விடுமுறை நாட்களில் என்னதான் வெயில் அதிகமாய் இருந்தாலும், சற்று நேரம் நண்பர்களுடன் சேர்ந்து, வெளியில் சென்று விளையாடுங்கள்; வீடியோ கேம்கள், ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள்.

6. கோடை விடுமுறை நாட்களில் உங்களுக்கு பிடித்த விளையாட்டு, மொழி, இசைக்கருவி அல்லது ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக்கொள்ள முயலுங்கள்.

7. புத்தகங்கள் படிக்க, நூலகத்திற்கு சென்றுவர முயற்சி செய்யுங்கள்.

பெற்றோர்களுக்கு:

1. கோடை விடுமுறையில் குழந்தைகளை ஒரு குறுகிய கால சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுங்கள்; சுற்றுலா என்கிற போது, ஆடம்பரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அருகிலுள்ள அதிகம் அறியப்படாத இடத்திற்கு கூட குழந்தையை அழைத்துச் செல்லலாம்.

2. மேலும் குழந்தைகள் பார்க்க வேண்டிய இடங்கள், அறிய வேண்டிய விஷயங்கள் என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் கால கட்டமாக இந்த விடுமுறை நாட்களை செலவிட திட்டமிடுங்கள்.

3. கோடை விடுமுறையில் குழந்தைகளை உங்கள் பெற்றோரின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள்; பாசம், நேசம், அன்பு போன்ற குணங்களை அவர்கள் அறிய, உணர வழிவகை செய்யுங்கள். குழந்தைகள் கணினி, ஸ்மார்ட்போன், செயற்கை மனிதர்கள் தாண்டிய நிஜ உலகத்தை அறிந்து கொள்ளட்டும்.

4. விடுமுறையில், வீட்டின் சின்னச் சின்ன வேலைகளை செய்யச் சொல்லி, குழந்தைகளை பழக்குங்கள்; இது, அவர்களின் அறை மற்றும் படுக்கையை சரி செய்வதாக, அலமாரியை ஒழுங்குப்படுத்துவதாக கூட இருக்கலாம்.

5. விடுமுறையில் குழந்தைகளுக்கு சமையலின் அடிப்படையைக் கற்றுக்கொடுத்தால், அது அவர்களுக்கு வருங்காலத்தில் உதவும்.

6. தினமும் ஒரிரு மணி நேரமாவது குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள்; ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்த, கற்றுக்கொண்ட விஷயங்களை அவர்களிடம் கேட்டறியுங்கள்; உங்களின் குழந்தைப்பருவ நினைவுகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

7. குழந்தைகளின் உருவாக்கத்திறனை அதிகப்படுத்தும் DIY செயல்களை குழந்தைகளுக்கு கற்பித்து, அவர்களை செய்யச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.

பிள்ளைகளுக்கு என தலைப்பிட்டதையும் பெற்றோரான நீங்கள் படித்திருப்பீர், இவ்விஷயங்களை உங்கள் குழந்தைகளை செய்யச் சொல்லி, அவர்களின் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற, குழந்தைகளுக்கு உதவுங்கள்.! இத்தகவல்களை மற்ற பெற்றோர் அறிய, பதிப்பை பகிருங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon