Link copied!
Sign in / Sign up
25
Shares

கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்டும் பானம் - பானகம்!

கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் களைப்பை நீக்கி, புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் ஒன்றாய் தரக்கூடிய ஒரு பானமாக பானகம் விளங்குகிறது; இது அடுப்பில் வைத்து காய்ச்சாமல், சமைக்காமல் தயாரிக்கக்கூடிய ஒரு பானம் ஆகும். பானகம் என்பது பானத்தில், புளிப்பு, இனிப்பு, லேசான காரம் என 3 சுவைகளும் ஒன்றாய்க் கலந்து, மேலும் இக்கலவையில் வெல்லம், சுக்கு, ஏலக்காய், புளி, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம்.

நீங்கள் இதுவரை குடித்திராத பானமாக, இனிப்பும், புளிப்பும் கலந்த புதுவித சுவையுடன் உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும் வகையில் அமையும் இந்த பணத்தை எப்படி செய்வது என்று இப்பதிப்பில் படித்தறியலாம்..!

தேவையான பொருட்கள்...!

புளி – சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 மேஜைக்கரண்டி, சுக்குப்பொடி – 1/4 தேக்கரண்டி, ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி, மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி, தண்ணீர் – 2 கப்

செய்முறை...

1. முதலில் வெல்லம் அல்லது (கருப்பட்டி) - ஐ தட்டி, நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும்

2. புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைத்து, இதில் பொடியாக்கிய வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்த்து, வெல்லத்தை நன்கு கரைக்கவும் 

3. வெல்லம் நன்கு கரைந்த பின், அந்நீரை வடிகட்டி, இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்

4. இவ்வாறு தயாரித்த நீரை, சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்; அவ்வளவே, பானகம் தயார்!

இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள மிளகு மற்றும் சுக்கு தொண்டைப்பிடிப்பை குணமாக்க மிக நல்ல மருந்து; மேலும் இது சளியையும் குணப்படுத்த உதவும். இந்த பானம், கோடை வெயிலினால் ஏற்படும் களைப்பையும், உடல் உஷ்ணத்தையும் தூர விரட்ட உதவும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon