Link copied!
Sign in / Sign up
1
Shares

கோடைகாலத்தில் குளிர்சாதனப்பெட்டியின்றி, காய்கறிகளை புதிதாக வைப்பது எப்படி?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கமானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், வேகாத வெயிலில் சந்தையிலிருந்து அல்லது கடையிலிருந்து நாம் வாங்கி வரும் காய்கறிகளானது சீக்கிரம் வாடி விடுகிறது; இந்த காலகட்டத்தில் காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக - புதிதாக வைத்துக் கொள்வது என்பது எளிதான காரியமல்ல. அதிலும் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடுகளில் காய்கறிகளானது ஒரு நாளைக்கு மேல் நிலைக்காது; குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மிக விரைவாக காய்களின் சுவை மற்றும் குணம் மாறிவிடுகிறது.

மேலும் நிபுணர்கள் காய்கறிகளை சமைத்து சாப்பிடும் வரை புதிதாக - பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள இயலும் என்று கூறுகின்றனர். அப்படி காய்களை குளிர்சாதனப்பெட்டியில் உதவியின்றி, பிரஷ்ஷாக - புதிதாக வைப்பது எப்படி என்று படித்தறியலாம்..!

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை மற்ற காய்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது; குறிப்பாக வெங்காயத்துடன் சேர்த்து வைக்கவே கூடாது. ஏனெனில் வெங்காயத்திலிருந்து வெளி வரும் வாயு, உருளைக்கிழங்கை விரைவில் வாடச் செய்துவிடும்.

செலரி - கொத்தமல்லி

செலரியை நீண்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருக்க வேண்டுமானால், அதன் தண்டுப்பகுதியில் தண்ணீரை தெளித்து ஒரு பாலிதீன் பையில் போட்டு வைக்கவும்.

வெங்காயம்

வெங்காயத்தை எப்பொழுதும் தனியாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக் கொண்டால், அது வாடாமல் நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் வரை கூட நீடிக்கும். 

காளான்

காளானை ஒரு பாலிதீன் பையில் போட்டு, அதில் ஆங்காங்கு சிறு சிறு ஓட்டைகளைப் போட்டு வைத்தால், காளான் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை நீண்ட நாட்கள் சேகரித்து வைப்பது மிக மிக சுலபம்; ஏனெனில் இந்தக் காயை கனிந்த பின்னரும் அதாவது பழுத்த பின்னரும் சமைக்கப் பயன்படுத்தலாம்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை வெயில் படாதவாறு, எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்குமிடத்தில் வைத்துக் கொண்டால், இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் வாங்கிய பின், அதன் காம்புகளை வெட்டி விட்டு, அதனை ஈரமான துணியால் சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

கேரட்

கேரட்டின் மேல் பகுதியை வெட்டி, ஈரமான துணி அல்லது பாத்திரம் - டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியை ஈரமான துணியால் சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் அல்லது ஒரு டப்பாவில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் சரி, இது நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

வெள்ளரிக்காய்

கோடையில் வெள்ளரிக்காய் சீசன் என்பதால், வாங்கி வரும் வெள்ளரிக்காயை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.

பூண்டு

பூண்டு நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதனை இருட்டான இடத்திலோ அல்லது நல்ல குளிர்ச்சியான இடத்திலோ பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

பீன்ஸ்

ஈரப்பதமான இடத்தில் - ஈரமான துணியில் போட்டு வைத்தால், பீன்ஸ் நீண்ட நாட்கள் புதிதாக - பிரஷ்ஷாக இருக்கும்.

வெண்டைக்காய்

இது மற்ற காய்கறிகளைப் போல் ஈரப்பதமுள்ள இடத்தில் இருக்காது; எனவே வெண்டைக்காயை காற்றுப்புகாத பாத்திரத்தில் - டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையை பாத்திரத்தில் - டப்பாவில் போட்டு, மூடாமல், அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அது பல நாட்கள் வரை வாடாமல், நன்றாக இருக்கும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon