Link copied!
Sign in / Sign up
0
Shares

கோடைகாலத்தில் ஐஸ்கட்டியால் சருமத்திற்கு ஏற்படும் 5 நன்மைகள்..!

கோடைகாலம் வந்துவிட்டாலே, வெயிலின் தாக்கத்தை பற்றிய பயம் அனைவரின் மனதையும் கதிகலங்க செய்துவிடும். அதிலும் பெண்களின் மனதில் அழகை பற்றிய எண்ணங்கள் எழுந்து அவர்களை அச்சுறுத்தும். என் நிறத்திற்கு என்னாகுமோ? முகத்திற்கு என்னாகுமோ? சருமம் என அவர்களின் கவலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்..!கோடைகால தாக்கத்தை குறைக்க ஐஸ்கட்டிகள் உதவுகின்றன. அவற்றின் பயன்பாட்டினை பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

1. வெயிலினால் உண்டான பருக்கள் மற்றும் பருக்களால் உண்டான வீக்கத்தை போக்க ஐஸ்கட்டிகளை பயன்படுத்தலாம்; நல்ல பலன் இருக்கும். பருக்கள் மற்றும் வீக்கத்தின் மீது ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்கவும்.

2. வெயிலில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால், அதனால் ஏற்பட்ட தடுப்புகள் மற்றும் எரிச்சலை குணப்படுத்த ஐஸ்கட்டிகள் பெரிதும் உதவுகின்றன.

3. வெயிலால் உங்கள் சருமம் பொலிவை இழந்து வறண்டிருக்கும்; ஐஸ்கட்டியை உபயோகிப்பதால், இழந்த ஈரப்பதத்தை மீண்டும் பெற்று, சருமத்தை பொலிவுறச் செய்யலாம்...

4. வெயிலால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, உடலிற்கு குளுமையை அளிக்க ஐஸ்கட்டிகள் பெரிதும் உதவுகின்றன..!

5. வெயிற்காலத்தில் முகத்தில் ஏற்படும் கருமையை போக்கவும், முகத்தின் பொலிவை காக்கவும் ஐஸ்கட்டிகளை உதவுகின்றன. மேலும் முகத்திற்கு ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்யவும்..!

வரவிருக்கும் கோடைகாலத்தில் இருந்து, உங்கள் சருமத்தை காக்க மேற்கண்ட முறைகளை முயற்சித்து பார்க்கலாம்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon