Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பிணி பெண்ணின் வாழ்வில் கண்டிராத சோகத்தின் உச்சம் - கேரளாவில் நடந்த உண்மை சம்பவம்

கர்ப்பிணிகளின் வாழ்க்கை என்பது மீளா துயரத்தை இந்த பத்து மாதத்தில் தர தயங்குவதில்லை என்றாலும், அதை கடந்த பல வலிகளை பிரசவத்தின்போது கர்ப்பிணிகளால் மட்டுமே அனுபவிக்க இயலும். உலகத்தில் மிகவும் அதிக வலியை தாங்கக்கூடிய ஒருவர் யாரென்றால்., அது தான் பெண்ணவள். பிரசவ வலியை விட மிகவும் கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லையென்றாலும், தன் குழந்தையை தாங்கும் நிமிடத்தை நோக்கி காத்திருக்கும் அவள், அந்த வலியை பொருட்படுத்தாது புன்னைகைக்கிறாள்.   

என்னிடம் காசு இருக்கிறது இறைவா! அதனால் பிரசவ வலியை குறைத்துக்கொடு என யாராலும் கேட்க முடியாது. காரணம், பிரசவ வலி என்பது ஏழை - பணக்காரர்கள் பார்த்து எப்போதும் வருவதில்லை. அதையும் கடந்த துயரங்களை ஒவ்வொருவரும் சந்தித்தாலும்., பணம் இருப்பவன் தேவையான வசதியை செய்து தருகிறான். இல்லாதவன் என்ன செய்வான்? அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவின் பாலக்காடு அட்டப்பாடியில் நடந்திருக்கிறது.

பாலக்காடு பகுதியில் 27 வயதான கர்ப்பிணி பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல் பெட்சீட் துணியால் சுற்றி தூக்கி கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி அலையை உருவாக்கியிருக்கிறது.

இந்த புகைப்படம் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

இந்த காணொளியில், 6 நபர்கள் அப்பெண்ணை துணி சுற்றி மரக்கம்புகளால் தூக்கி செல்வது போன்ற காட்சிகள் காண்போர் கண்களை கலங்க செய்திருக்கிறது.

இறுதியில் அந்த பெண் நாடோடி மருத்துவமனையான கொத்தாராவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக கண்ணீர் மல்க அவளுடைய சுற்றத்தார் கூறி இருக்கின்றனர். மேலும், தற்போது தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், வசதியற்ற நாடோடி பெண் அனுபவித்த கர்ப்ப வேதனைக்கு கடும் கண்டனங்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon