Link copied!
Sign in / Sign up
14
Shares

கீழே விழும் குழந்தைகளிடம் பார்க்க வேண்டிய 5 விஷயங்கள்...

உங்கள் குழந்தைகளின் சிறுவயதில் நன்றாக ஓடிக்கொண்டிருக்க, திடீரென அவர்கள் உட்காரவோ அல்லது விழவோ செய்வார்கள். அவர்கள் பிறந்து பதிமூன்று மாதமாக இருக்க எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்கின்றனர். தலையில் மட்டுமே கவனம் செலுத்த கால்கள் தடுமாறுவதை சில சமயம் மறந்தும் விடுவார்கள். குழந்தைகள் நடக்கும் வழியில் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்துவது தடையாக இருக்கும் ஒரு பொருள் தான். ஆகவே குழந்தைகள் தவழும் போதும், நடக்கும் போதும் எதுவும் குறுக்கே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நடக்க பழகும் குழந்தைகள் கீழே விழும்போது நாம் பார்க்க வேண்டிய 5 விஷயத்தை இப்போது பார்க்கலாம். 

1. நிதானம் இழத்தல்:

குழந்தைகள் நடக்கும்போது திடீரென விழுவார்கள். அப்போது அவர்கள் நிதானமற்று இருப்பார்கள் எனில் மருத்துவ உதவி என்பது கண்டிப்பாக வேண்டும். அப்படி விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும். நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என பார்த்து மோசமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

2. காது, மூக்கு, வாயில் நீர் வருதல்:

உங்கள் குழந்தைகளின் காது, மூக்கு அல்லது வாயில் நிறமற்ற நீர் வெளியேறினால் விரைவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அது தான் CSF எனப்படும் செரிப்ரோஸ்பைனல் திரவமாகும். இந்த திரவம் மூளை மற்றும் தண்டுவடத்தை சூழ்ந்திருக்கும். இதுதான் மூளையை பாதுகாப்பதும் கூட... இந்த திரவம் வெளியேறினால் தலைவலி, கண் பார்வை குறைபாடு, காது கேளாமல் போவது போன்ற பிரச்சனை வரலாம்.

3. மண்டை ஓட்டில் அடி:

மண்டை ஓட்டில் அடிபட்டால் நான்கு விதத்தில் சோதனை செய்யப்படுகிறது.

i. குழந்தையின் மண்டை ஓட்டு எலும்பில் ஏதும் பிரச்சனையா என பார்க்கப்படுகிறது.

ii. தலையில் ஏதும் வெட்டுக்காயம் இருக்கிறதா? என பார்க்கப்படுகிறது.

iii. டையாஸ்டிக் எலும்பு முறிவு சோதனை என்பது குழந்தைகளுக்கு மட்டுமே பார்க்கப்படும் ஒன்றாகும்.

iv. கண் மற்றும் காதுகளுக்கு செல்லக்கூடிய அடிப்படை நரம்புகளும் சரிப்பார்க்கப்படுகிறது.

4. சுவாச பிரச்சனை:

குழந்தைகள் கீழே விழுந்தால் முதலில் சோதனையிட வேண்டியது அவர்கள் விடும் மூச்சு தங்குதடையின்றி இருக்கிறதா? என்பதையே ஆகும். உங்கள் குழந்தை மூச்சு விடும்போது வேகமாக விடுவார்கள் எனில் சில சமயத்தில் 10 முதல் 20 நொடி மூச்சு அடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி பிரச்சனைகளை பார்த்துக்கொண்டு இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது மிக நல்லது.

5. கண்கள் வெளிவருதல்:

கீழே விழுந்த உங்கள் குழந்தைகளின் கண்கள் வெளியில் வந்தால்... உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். தலையில் அதிர்ச்சி ஏற்படுவது என்பது மூளைக்கு அழுத்தத்தை தந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும். நரம்புகள் சேர்ந்து கண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதனால் கண்கள் வெளிவந்து காணப்படக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. அருகில் உள்ள மருத்துவ வல்லுனரை அணுக வேண்டியது அவசியமாகும்.

குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்க திடீரென விழுவார்கள். இது இயல்பான ஒன்று என்றாலும், செயற்கையினால் விளையக்கூடிய விளைவுகள் பல என்பதை புரிந்து உங்கள் குழந்தைகளின் மீது ஒவ்வொரு நிமிடமும் பார்வையை வைக்க பழகுங்கள். அப்போது தான் அவர்கள் வித்தியாசமான செயல்களை கூட எளிதில் கண்டுபிடிக்க  இயலும். உங்களுக்கு சந்தேகமென்றால் மருத்துவரை அணுக முயற்சிப்பது நல்லது. நீங்களாக எந்த முடிவையும் எடுக்க முற்படாதீர்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon