Link copied!
Sign in / Sign up
5
Shares

கருவுறுதல் பற்றிய 13 உண்மைகள்

திருமணம் ஆன முதலே நீங்கள் குடும்பத்தை பற்றி திட்டமிட தொடங்கிவிடுவீர்கள். குடும்பத்தை ஆரம்பிக்க நினைக்கும் போது உங்களுக்கு மனதில் எழும் முதல் கேள்வி - என்னால் கருவுற முடியுமா? என்பதுதான். கருவுறுதலை பற்றி நாம் வளரும்போது நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவை எந்த அளவு உண்மையானவை?

இப்போது நீங்கள் ஒரு குடும்பத்தைத் தொடங்கத் தயாராக உள்ளீர்கள். எனவே, சில தவறான கருத்துகளை தெளிவுபடுத்துவதற்கும், கருவுறாமைக்கான சிகிச்சையைப் பற்றி உங்களால் முடிந்த அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கான சரியான நேரமாகும்.

மலட்டுத்தன்மை கருச்சிதைவு, குறை பிரசவம், மற்றும் கருவுறாமை போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது.

கருவுறுதல் பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

1 கருவுறுதல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது அல்ல. 10 ஆரோக்கியமான தம்பதிகளில் 1 தம்பதிக்கு கருவுறுதலில் பிரச்சினைகளுக்கு ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, கருவுறுதலை பாதிக்கும் முக்கிய காரணி வயது ஆகும். பெண்களுக்கு 20 வயது கருத்தரிக்க ஏற்ற வயதுஆகும். 27 வயதை கடந்துவிட்டால் பிரச்சினைகள் தொடங்கும்.

2 எல்லா கருவுறாமை நிகழ்வுகளிலும் 12% பிரச்சினைகள் எடை தொடர்பானவை. உங்கள் பிஎம்ஐ 19 மற்றும் 25 க்கு இடையில் இருந்தால், நீங்கள் கர்ப்பமாக தயாராக உள்ளீர்கள். உங்கள் பிஎம்ஐ கண்டுபிடிக்க உங்களின் எடையை கிலோகிராமில் பிரித்து உங்கள் உயரத்தை மீட்டரில் பிரித்து வகுக்கவும். பின் வரும் விடையை மீண்டும் உங்களின் உயரத்தாழ் வகுக்க வேண்டும்.

3 எந்தவொரு பாலியல் நிலைப்பாடு உங்களுக்கு கர்ப்பமாக இருக்கும் என்பதைப் பற்றி எந்தவொரு தெளிவான பதிலும் இல்லை. விந்தணுக்கள் உடலுறவு பிறகு உடனடியாக நீச்சலடிக்க தொடங்கிவிடும், எனவே நிலையை பொருட்படுத்தாமல், நீங்கள் ஆழ்ந்த ஊடுருவலில் கவனம் வேண்டும். உடலுறவுக்குப் பின் மேலே படுத்திருப்பதில் சிறிய நன்மை இருக்கலாம்.

4 ஆண்களுக்கு வயதால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்ற கட்டுக்கதை உள்ளது. ஆனால், 35 வயதை கடந்த ஆண்களுக்கும் உடலுறவில் பிரச்சினைகள் வரலாம். எனவே, நீங்கள் கருவுற விரும்பினால் உங்களின் துணையின் வயதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கருவுறுதல் பற்றிய சில தகவல்களை அறிந்துகொண்டோம், கருவுறுதலை அதிகப்படுத்தும் முறைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

5 நன்கு சாப்பிடுதல் நீங்கள் கருவுறுதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். வைட்டமின் சப்ளைகளை எடுத்துக்கொள்ள உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை கேளுங்கள். மேலும் புரோட்டீன், இரும்பு சத்து, மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

6 கருவுற முயற்சிக்கும் போது உங்கள் உடலின் காபின் அளவையும், மதுவின் அளவையும் கவனிக்க வேண்டும். மது குடிப்பது ஈஸ்ட்ரோஜென் சுரப்பை குறைப்பதோடு உங்கள் கரு முட்டையையும் பாதிக்கும்.

7 பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும்போது இயற்கையாய் விளைந்தவற்றையே சாப்பிட வேண்டும். பூச்சிக்கொல்லிகள் விந்துக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் பெண்ணின் கருமுட்டையையும் பாதிக்கலாம்.

8 கடுகு எண்ணெய், வேர்க்கடலை, காய்கறி, அல்லது கனிம எண்ணை போன்ற விந்தணுக்களை பலப்படுத்தும் உணவுகளை பயன்படுத்தவும். உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

9 பெண்கள் மட்டும்தான் அவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டுமென்றில்லை. ஆண்களும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

மேலே சொன்ன எதுவும் உங்களுக்கு பயனளிக்கவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இப்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்களுக்கு உதவ இயலும்

10 விட்ரோ முறை (IVF): இந்த செயல்பாட்டில், உங்கள் கருமுட்டை ஒரு ஆய்வகத்தில் வைக்கபட்டு ஒரு விந்து கொண்டு பிரித்தெடுக்கப்பட்டு அதைக்கொண்டு கருத்தரிக்கப்படும். கருக்கள் உருவாகும்போது, 1 அல்லது 2 உங்கள் கருப்பையில் விதைக்கப்பட்டு, மீதமுள்ளவை சேமிக்கப்படும்.

11 கருவுற்றல் மருந்துகள்: இவை ஊசி அல்லது மாத்திரைகள் வடிவில் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த மருந்து முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் விந்தணுக்கள் கருப்பையை நோக்கி வர உதவுகிறது.

12 செயற்கை கருவூட்டல்: இது மிகவும் பொதுவான முறை ஆகும். சுத்திகரிக்கப்பட்ட விந்து உங்கள் கருப்பையில் நேரடியாக செலுத்தப்படும் , மருத்துவர்கள் வழக்கமாக பாதுகாப்பிற்காக கருவுறுதல் மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள்.

13 நன்கொடை முட்டை: இது மீண்டும் ஒரு பொதுவான முறையாகும். முட்டைகளை இளம் பெண்களிடமிருந்து எடுத்து, உங்கள்துணையின் விந்துடன் கருவுற செய்வார்கள். பிறகு உருவாகும் கருக்கள் உங்கள் கருப்பையில் வைக்கப்படுகின்றன.

இன்றைய தலைமுறையில் கருவுறாமை என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை கொண்டு உங்களுக்குள் எழும் எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon