Link copied!
Sign in / Sign up
3
Shares

கருவிற்கு பலமளிக்கும் 3 அசைவ உணவுகள்..!

கர்ப்பிணிகள் முதல் 3 மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இச்சத்துக்கள் தான் கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கும், கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள், இக்காலங்களில் இச்சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது நல்லது. இந்த பகுதியில், கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம்  தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்த்து, படித்தறியலாமா..!!

நாட்டுக்கோழி

கர்ப்பிணிகளுக்கு நாட்டுக்கோழி ஒரு பாதுகாப்பான மற்றும் முக்கிய உணவு. ஏனெனில் இதை முதல் 3 மாதங்களில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம், சோர்வு போன்றவை நீங்கும். மேலும் நாட்டுக்கோழியில் இரும்புச்சத்தானது அதிகம் இருப்பதால், உடலின் இரத்த ஓட்டமும் நன்கு அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்திருப்பது எல்லோரும் அறிந்த விஷயமே. எனவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை உணவில் சேர்த்து, சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி சேய்க்கும் நல்லது.

சால்மன் மீன்

மீனில் ஒமோக-3 கொழுப்பு அமிலம், கால்சியம், விட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் உண்பது நல்லது. ஆனால் மீன்களில் சால்மன் என்ற மீனில் மற்ற அனைத்து மீன்களையும் விட, அதிக அளவில் இச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon