Link copied!
Sign in / Sign up
11
Shares

கருவிற்கு பலம் தரும் 7 சைவ உணவுகள்..!

பெண்கள் கர்ப்பமாக இருக்கையில், முதல் 3 மாதங்களில் மிகக் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் இக்காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே கர்ப்பிணிகள், முதல்  3 மாதங்களில் உட்கொள்ளும் உணவுகளிலும், செயல்களிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

கர்ப்பிணிகள் முதல் 3 மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இச்சத்துக்கள் தான் கருவிலுள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கும், கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள், இக்காலங்களில் இச்சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது நல்லது. இந்த பகுதியில், கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்த்து, படித்தறியலாமா..!!

பசலைக்கீரை

பசலைக் கீரையில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது; இதனை கர்ப்பிணிகள் நன்கு சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவிலுள்ள சிசுவிற்கும் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் விட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், புரதம் ஆகியவை அதிகமாக நிறைந்துள்ளன. ஆகவே இதனை அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரதச் சத்தானது கிடைக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை உண்டால் மட்டும் உடல் இயங்காது; அந்தச்சத்து உடலில் உறிஞ்சுவதற்கு விட்டமின் டி நிறைந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும். இவ்விட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் நிறைய உள்ளது; மேலும் இதனை கர்ப்பிணிகள் உண்டால், காலை மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.

வெண்டைக்காய் 

இக்காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து உண்ண மாட்டார்கள்; ஆனால், இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனை இல்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்க இயலும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில்விட்டமின் சி அதிகம் உள்ளதால், இது தாயின் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதிலுள்ள ஃபோலிக் அமிலம் குழந்தை பிறப்பதில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது; இதனை கர்ப்பிணிகள் தினந்தோறும் அதிகம் உணவில் சேர்த்தால், அதிலுள்ள இரும்பு சத்து, அன்னையின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

தயிர்

பால் மூலம் உருவாக்கப்படும், பால் பொருட்களில் ஒன்றான தயிரினில் அதிக கால்சியம் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல் உண்டாகலாம். இவவெரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சி உடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் உண்பது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon