Link copied!
Sign in / Sign up
4
Shares

கருவின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்..!

தாயின் கருவறையில் வளரும் கருவில் முதலில் உருவாகும் உறுப்பு இதயம்.! அந்த இதயம் நன்கு பலம் வாய்ந்ததாக இருந்தால் தான், குழந்தை நீண்ட ஆயுள் உள்ள வாழ்வை மேற்கொள்ள இயலும். இத்தனை முக்கியமான கருவின் இதயத்தை பலப்படுத்த உதவும் 5 உணவுகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்..! 

1. புரதம்..!

கர்ப்பிணிகள் கருவின் இதயத்தை பலப்படுத்த புரதம் நிறைந்த உணவுகளான, நாட்டுக்கோழி, இறைச்சி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு, பல், பருப்புகள், புரதம் நிறைந்த தானியங்கள் என அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..!

2. பருப்புகள்..!

முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை அடிக்கடி கர்ப்பிணிகள் தம் உணவில் சேர்த்துக் கொள்வது கருவிற்கு மிகுந்த நலத்தை அளிக்கும்.

3. காய்கள்..!

பச்சைக்காய்கறிகள், பழங்கள், புரோக்கலி, காலிபிளவர், கீரை வகைகள் என பச்சை நிற காய்கள் மற்றும் பழங்கள் என அனைத்துமே இருதய வளர்ச்சிக்கு மிகுந்த துணை புரியும்..!

4. தானியங்கள்..!

கர்ப்பிணிகள் அனைத்து வித தானியங்களையும் அதாவது அரிசி, கோதுமை, சோளம், பாசிப்பருப்பு, மற்ற பருப்பு வகை தானியங்கள் என எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

5. பால் பொருட்கள்..!

பால் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களான, தயிர், மோர், வெண்ணெய், நெய் (இவ்விரண்டினை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்), பன்னீர், பாலாடைக்கட்டி, பாலால் ஆன இனிப்புகள் என அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; இனிப்பு மற்றும் கொழுப்புகளை அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon