Link copied!
Sign in / Sign up
2
Shares

கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்

பொதுவாகவே ஆடை அலங்காரம் என்பது எப்போதும் பெண்களால் விரும்பபடும் ஒன்று. இப்போது அழகு நிலையங்களுக்கு செல்வது, அழகு சாதனப்பொருட்களை உபயோகிப்பது போன்றவை பெரும்பாலான பெண்களின் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது. சில பெண்கள் கர்ப்ப காலத்தில் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும். அழகு சாதனங்களில் உள்ள இரசாயனங்களினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அழகுசாதனப் பொருட்கள்

அழகு சாதனப்பொருட்கள் மலிவு விலையில் வாங்கி உபயோகிப்பது, விலை உயர்ந்தது என வாங்கி உபயோகிக்கும் அனைத்திலும் இரசாயனங்களின் கலப்பு இருக்கும். நீண்ட நேரத்திற்கு கலையாமல் இருக்கும் அழகு சாதனப்பொருட்கள் தற்போதைய காலத்தில் பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இவற்றில் இரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கிறது என தெரிந்தும் அவற்றை உபயோகிறார்கள்.

அலுவலகத்திற்கு செல்லும் போதும், விருந்து உள்ளிட்டவைகளுக்கு செல்லும் போதும் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்த எண்ணற்ற பொருட்களை உபயோகிக்க நேரிடுகிறது. ஆனால் இவை கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். “தாயின் அத்தியாவசியத் தேவை “ என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி உபயோகிக்கும் தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்கிறது ஆய்வுகளின் முடிவுகள்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால் அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தாய் உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் உள்ள இரசாயனங்கள் மூலம் குழந்தைக்கு இந்த தீங்கு ஏற்படுகிறது.

ஹார்மோன்

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்வதால் ஹார்மோன் பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றன.

இனப்பெருக்க வளர்ச்சி

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

புற்றுநோய் பாதிப்பு

கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அமிலங்களால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon