Link copied!
Sign in / Sign up
21
Shares

கருவிலிருக்கும் குழந்தை வெறுக்கும் அன்னையின் 6 செயல்கள்..!

கர்ப்பிணிகளே! நீங்கள் உங்களுக்குள் வளரும் கரு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என அனைத்து செயல்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்கிறீர். இருப்பினும் நீங்கள் செய்யும் சில செயல்கள், கருவிலிருக்கும் உங்கள் குழந்தையை முகம் சுளிக்க வைக்கிறது. அப்படியென்ன நீங்கள் செய்கிறீர்? உங்கள் குழந்தை உங்களிடம் வெறுக்கும் அந்த விஷயங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. அதிக பேச்சு-தொடுதல்..!

கர்ப்பிணிகள் கருவில் குழந்தையுடன் பேச வேண்டும்; வயிற்றை தொட்டு குழந்தைக்கு உங்கள் அன்பை தெரிவிக்க வேண்டும் தான். ஆனால், 24/7 என எந்நேரமும் நீங்கள் தொட்டுக்கொண்டும், குழந்தையிடம் பேசிக்கொண்டும் இருந்தால், குழந்தை வயிற்றில் அதிகமாக, ஓரிடத்தில் இல்லாமல் அசைந்து கொண்டே இருக்கும். இது குழந்தையின் அவஸ்தையை காட்டுகிறது. குழந்தைக்கு தனியாக இருக்க உறங்க என சிறிது நேரம் கொடுங்கள் பெண்களே!

2. பலத்த சிரிப்பு..

நீங்கள் சந்தோஷமாக இருந்தால் தான், உங்கள் குழந்தையும் சந்தோஷமாக இருக்கும். ஆனால், நீங்கள் சத்தமாக இடைவிடாது சிரித்துக் கொண்டே இருந்தால், அது உங்கள் குழந்தையின் தூக்கத்தை முற்றிலுமாக கெடுத்துவிடும்; இது குழந்தை வெறுக்கும் முக்கிய விஷயமாகும்..!

3. சூடான உணவு..!

நீங்கள் சூடாக உணவினை உட்கொண்டால், அது குழந்தையின் வயிற்றுக்குள் தொப்புள் கொடி வாயிலாக செல்கையில் குழந்தையின் உடல் நெருப்பால் சுட்டதை போன்ற ஒருவித அவஸ்தையை அனுபவிக்கிறது; ஆகையால் அதிக சூடான உணவு உட்கொள்வதை தவிர்க்கவும்.!

4. அதிக வெளிச்சம்..

அதிக வெளிச்சம் உங்கள் உடலின் மீதோ அல்லது வயிற்றின் மீதோ பட்டால், அது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

5. சோகம்..!

நீங்கள் சோகமாக இருந்தால், உங்கள் சோக மனநிலை, கருவிலுள்ள குழந்தையையும் சோக உணர்வு கொள்ளச் செய்கிறது. இதை கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..! இது குழந்தையின் மனநிலை மற்றும் உடல்நிலையை பாதித்து, குழந்தையின் எதிர்காலம் சீர்குலைய காரணமாகிவிடலாம்.

6. புளிப்பு..!

நீங்கள் அதிக புளிப்பான உணவினை உட்கொள்வதையும் உங்கள் குழந்தையின் உடலால் ஏற்றுக்கொள்ள இயலாது; ஆகையால் அதிக புளிப்பினை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon