Link copied!
Sign in / Sign up
293
Shares

கருவிலிருக்கும் குழந்தை அம்மாவிற்கு எழுதும் கடிதம்

அன்புள்ள அம்மா,

நான் இதுவரை உங்களை சந்திக்கவில்லை. ஆனால் உங்களின் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் உங்களுள் இருப்பதையே என் முதல் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் இங்குதான் இருக்கிறேன் அம்மா! இங்கே மிகவும் இருட்டாக இருக்கிறது. ஆனால் அது சூடாகவும் மற்றும் ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது. நான் நிஜமாகவே இங்கே தான் இருக்கிறேன் அம்மா. உங்கள் அன்பான கரங்களில் என்னை கட்டியணைக்கும் வரை காத்திருக்க முடியாது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, நம் நரம்புகளின் வழியாக இருவரின் உடலிலும் ஒரே இரத்தம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. உடல் திசுக்களை கூட நாம் பகிர்ந்து கொள்கிறோம். அது என்னை உங்களுள் ஒரு பகுதியை உருவாக்கி இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் அதே உணவை நானும் சாப்பிடுகிறேன்! எனக்கு தெரியும் நான் தொப்புள் கொடி மூலம் உங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவு மற்றும் சுவை மிகுந்த உணவுகளின் மூலம் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற்று நான் உங்களை சந்திக்க ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் அம்மா.

நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும். நீங்கள் பேசும்போது உங்கள் குரலை என்னால் அடையாளம் காண முடியும். நீங்கள் எனக்காக சில கதைகள் மற்றும் கவிதைகளை நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள். சில மென்மையான மெல்லிசை பாடல்களையும் நீங்கள் எனக்காக பாடுகிறீர்கள். அம்மா நான் அனைத்தையும் கேட்டு கொண்டிருக்கின்றேன். நீங்கள் எப்போதும் உங்கள் வயிற்றில் இருக்கும் என்னை தொட்டு பார்க்கிறீர்கள். என் இதயம் படபடக்கிறது மற்றும் நான் உங்களை பார்க்க மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் வயிற்றை தொடும் விதம், என்னை ஏற்கனவே பாதுகாப்பாக உணர செய்கிறது மற்றும் உங்களின் அன்பை வெளிக்காட்டுகிறது.

நீங்கள் சிரிக்கும் போது உங்களின் சிறந்த பகுதியாக தோன்றுகிறது. நீங்கள் எப்போதாவது தான் சிரிக்கிறீர்கள். ஆனால் அது எனக்குள் என்ன காரணத்திற்காக ஏற்படுகிறது என தெரியாமலே நானும் சிரிப்பேன். இது எனக்கு மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கும். உங்கள் வயிற்றினுள் எதோ நிகழ்வது போன்று உணர்வீர்களே, அது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அது எனக்கு விக்கல் எடுப்பதால் தான். அது நிகழும் போதெல்லாம் நீங்கள் அடிக்கடி உங்கள் வயிற்றை உள்ளிழுத்து வேடிக்கையான நிகழ்வாக பட்டுப்பூச்சி பார்ப்பது போல் உணர்ந்திருப்பீர்கள்.

என்னால் அதிகம் கேட்க முடியாவிட்டாலும், உங்கள் கருவறையிலிருந்து வெளியில் இருக்கும் உலகம் மிகவும் அழகானதாக இருக்கும் என என்னால் உணர முடிகிறது. உங்களை பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருப்பதை என்னால் கேட்க முடிகிறது. அனைவரும் உங்களை தொடும் விதத்தையும் என்னால் உணர முடிகிறது. இது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. இந்த கர்ப்பகால பயணம் முடித்ததும் அவர்களை சந்திக்க போகிறேன் என்பது எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது.

உங்களுக்கு தெரியுமா, நான் உங்கள் உள்ளே வாழ்கிறேன், எனவே நீங்கள் என்னைப் பற்றி எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் மற்றவர்கள் முன் எந்த கவலையும் இல்லாதது போல் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுள் அதிக அளவில் பதற்றம் நிறைந்திருக்கிறது. இது உங்களை மிகவும் கவலைக்குரியதாக்குகிறது, ஆனால் நீங்கள் அதைப் பற்றி நேர்மறையாகவே சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் மட்டும் எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு மாலுமி புயலை எதிர்க்கொள்வதை போல், நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தையும் எதிர் கொள்கிறீர்கள். இது ஒரு சிக்கலான உடல்நல பிரச்சினை அல்லது பிரச்சனையின் சிறுபகுதியாக இருக்கும் போது, நீங்கள் அவை அனைத்தையும் மிகவும் துணிச்சலுடன் எதிர்கொள்கிறீர்கள். நீங்கள் எதையும் எனக்காக அர்ப்பணிக்கும் தைரியமான மற்றும் தன்னலமற்ற பெண்ணாக இருக்கிறீர்கள்.

நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள், நான் உங்கள் மீது எப்போதும் மரியாதையாக இருப்பேன். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போதும், ஆரோக்யமான நேரங்களிலும் நான் உங்கள் அருகில் இருப்பேன். இந்த உலகமே மாறினாலும் நீங்கள் எனக்காகவே இருப்பதை போல், நானும் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன்.

அளவற்ற அன்புடன்,

உங்கள் கருவில் இருக்கும் நான்.

Click here for the best in baby advice
What do you think?
67%
Wow!
33%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon