Link copied!
Sign in / Sign up
33
Shares

கருவில் குழந்தைகள் செய்யும் 9 விஷயங்கள்

மாதராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்பது பழமொழி. அப்படி பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விலும், கர்ப்பம் தான் வாழ்க்கையின் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. அவளுடைய கர்ப்பத்திலிருக்கும் குழந்தையை கையில் ஏந்தி தாய்மை அனுபவிக்கும் வரை அவர்களால் காத்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தாய் தன் குழந்தையை தனது கர்ப்பத்தில் உணர்கிறாள். அவர்களது குழந்தை கருவில் என்ன செய்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்குள் அதிகாகமாகவே இருக்கும். இதுவே அம்மா மற்றும் குழந்தைக்கு இடையேயான விலைமதிப்பற்ற தருணங்களை ஏற்படுத்துகிறது. நான் பாடும் பாடல்களை என் குழந்தை விரும்புமா? இது பாடக்கூடிய அனைத்து தாய்க்கும் இருக்க கூடிய பொதுவான சந்தேகம். குழந்தை உங்களை உதைக்கும் போது, நீங்கள் அந்த சந்தோஷத்தில் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியம் மேம்படும். இப்போது உங்கள் குழந்தை கருவில் செய்யும் 7 விஷயங்களை பார்க்கலாம்.

1 குழந்தை வளர்ச்சியடைதல்

உங்கள் கரு ஆணாக வளர்ச்சியடைதல் அவசியமில்லாத ஒன்று தான். ஆனால் இது உங்கள் குழந்தை கருவாய் இருக்கும் போதே ஏற்படக்கூடிய மாற்றமாகும். கருத்தரித்த 5 முதல் 6 வாரத்தில் கரு y-குரோமோசோம்களால் பாதிக்கப்படும். Y குரோமசோமில் உள்ள SRY மரபணு பாலின உறுப்பு உருவாவதை பாதிக்கிறது.

2 நகர்தல்

12 வாரங்களுக்கு பிறகு உங்கள் குழந்தை தன்னிச்சியாய் நகர தொடங்கும். கரு 2 இன்ச் நீளமுடைய கை , கால்கள் முழுமையாக வளர்ந்த குழந்தையாக மாறியிருக்கும். ஆனால் உங்களால் அதை உணரமுடியாது.

3 கண் சிமிட்டுதல்

உங்கள் குழந்தை கண் சிமிட்ட தொடங்கும். ஆனால் அவர்களால் எதையும் பார்க்க முடியாது. ஏனெனில், கருப்பை இருள் சூழ்ந்ததாய் இருக்கும்.

4 சிரிக்க தொடங்கும்

உங்கள் குழந்தை உங்கள் குரல் கேட்கிறது, அதை கேட்பதை பழக்கமாக்கி கொண்டிருக்கும். அதை உணரும் போது அவர்கள் கருவில் சிரிப்பார்கள். ஆம், அது உண்மை தான்! உங்கள் குழந்தை இன்னும் பிறக்கவில்லை என்றாலும், ஏற்கனவே உங்களை நேசிக்க துவங்கி இருக்கும். எனவே, உங்கள் சிறிய குழந்தைக்கு சில இனிமையான பாடல்களை பாட துவங்குங்கள், இப்போது அவர்கள் கேட்கும் விதமாக உங்களுக்கு தெரியும்.

5 கொட்டாவி விடுதல்

குழந்தை அம்மோனியச் சவ்வினுள் இருந்தாலும், அம்னோடிக் திரவங்களில் மிதந்து கொண்டிருப்பதால், எப்போதாவது, உங்கள் குழந்தை கர்ப்பத்தில் கொட்டாவி விடும். கொட்டாவி விடுதல் என்பது மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் உள்ள குறைபாடு ஆகும். குழந்தையின் வழங்கும் ஆக்ஸிஜன் உங்களிடமிருந்து வந்தாலும், இது உண்மையான உலகத்திற்கு நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும்.

6 அசைவுகள்

உங்கள் குழந்தைக்கு தசைகள் உருவாகி இருக்கும். உங்கள் குழந்தை அவற்றை பரிசோதித்து பார்க்க, கருப்பையகத்தின் எல்லைக்குள் நீட்டி பார்க்கும். 5 மாதங்களில், உங்கள் குழந்தை 6 அங்குல நீளம் வரை வளர்ந்திருக்கும். இப்போது உங்கள் வயிறு பெரிதாகி இருக்கும். உங்கள் கருப்பையில் குழந்தையின் அசைவை நீங்கள் உணர முடியும். உங்களால் குழந்தையின் நடவடிக்கைகளை உணர முடியும்.

7 வாயில் விரல் வைத்தால்

அம்மோனிய திரவத்தில் கரு உருவாகி இருப்பதால், அவர்களால் எதையும் விழுங்க முடியாது. எப்படி இருந்தாலும், உங்கள் குழந்தை கருவில் இருக்கும் போது வாயில் விரல் வைத்து சப்ப பழகி கொள்வதால், தாய்ப்பாலூட்டும் போது, மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிடுகிறது.

8 முக பாவனைகள்

உங்கள் குழந்தை பிறக்கும் போது, அசௌகர்யமாக இருப்பதை வெளிக்காட்ட முடியும். இதன் அடையாளமாக உங்கள் குழந்தை கருவிலிருக்கும் போதே பழித்து கட்டுவது போன்ற முகபாவனைகளை செய்ய துவங்கி விடும். உங்கள் கருவால் கருப்பையில் சிறிய வலியை ஏற்படுத்த முடியும். எனவே, கருவிலிருக்கும் குழந்தை பசி மற்றும் வலியை உணரும் போது, உங்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சிலவற்றை செய்யலாம் என நம்பப்படுகிறது.

9 பிரசவகால வலி

பிரசவ நேரம் நெருங்கும்போது உங்கள் குழந்தையின் காதுகள் நன்றாக செயல்படும், அவர்கள் எந்த திசையில் இருக்கிறார்கள் என்பதையும் உணருவார்கள். பிரசவ வலி வந்தவுடன் அவர்கள் தலையை முதலில் வெளியே கொண்டுவர முயற்சிப்பார்கள்.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon