Link copied!
Sign in / Sign up
49
Shares

கருவில் இருப்பது ஆண் குழந்தை என்பதற்கான 11 அறிகுறிகள்

கர்ப்பகாலத்தில் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கர்ப்பிணிகளும், உடன் இருப்பவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு பெயர் வைப்பதில் துவங்கி மேலும் பல விஷயங்களை கணிக்க முடியும் என்பதால் தான். மருத்துவ பரிசோதனைகளில் குழந்தை ஆண் அல்லது பெண் என்று கண்டறியும் முறை இருந்தாலும், நமது அரசாங்கம் இதற்கு தடை விதித்துள்ளது. இதனால் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா  என்பதை இந்தியாவில் தெரிந்து கொள்ள முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம்.

 

அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகளை பார்த்து சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இங்கு அதற்கான அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.

 

1 நிலை

வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.

2 சிறுநீர்

நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்தார்கள்.

3 முகப்பரு

கர்ப்ப காலத்தில் பருக்களால் அவஸ்தைப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.

4 வயிற்றின் அளவு

நிறைய பெண்கள் வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த கூற்றின் படி பல பெண்களுக்கு சரியாக நடந்துள்ளது.

5 மார்பக அளவு

கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.

6 பாதம்

கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

7 இதயத்தின் துடிப்பு

ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

8 கூந்தல்

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

9 உணவு

கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.

10 தூங்கும் நிலை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

11 வறட்சி

எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon