Link copied!
Sign in / Sign up
1
Shares

கருவில் இருந்து வரும் குழந்தையின் சத்தம் கொண்டு ஆணா? பெண்ணா? என கண்டுபிடிப்பதா?

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்றால் முதன் முதலில் கேட்கப்படும் கேள்வி என்பது அது ஆணா? இல்லை, பெண்ணா? என்பது தான். அன்று ஒரு குழந்தை ஆணா? இல்லை பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க இரண்டு விதமான அல்ட்ரா சவுண்ட் பார்க்கப்பட்டது. ஒன்று, முதல் மூன்று மாதங்களில் காணப்படும்...அதாவது 9 முதல் 13 வாரம் வரை காணப்படும் சத்தம். மற்றொன்று, இரண்டாவது மூன்று மாதங்களில்...அதாவது 18 முதல் 22 வாரங்கள் வரை காணப்படும் சத்தமாகும். இதை தான் குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடிக்க அவர்களுள் ஒருசிலர் கையாண்ட யுக்தியாம்.

ராம்ஸி எனப்படும் கோட்பாடுப்படி, ஒரு குழந்தை ஆணா? இல்லை, பெண்ணா? என்பதை கருவுற்ற ஆறே வாரங்களில் நச்சுக்கொடி கொண்டு கண்டுபிடிக்க முடியும் என்கிறது. இந்த முறைப்படி, நச்சுக்கொடியானது முதல் அல்ட்ரா சவுண்டில் வலதுப்பக்கம் இருந்தால் ஆணாக பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது என கூறுகிறது. ஒருவேளை இடப்புறம் இருப்பின் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது எனவும் இந்த கோட்பாடின் மூலம் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த ஆய்வுகளின் முடிவு அதன்பிறகு ஏதோ காரணத்தால் தளத்திலிருந்து மறைக்கவும்பட்டது குறிப்பிடத்தக்கது. அறிவியல் கூற்றுகள்படி, இந்த முறைக்காக 5,300 பெண்களின் கருப்பையில் இருந்து வந்த முதல் சத்தம் ஆராயப்பட்டதாகவும் அவர்கள் ஆறு வார கர்ப்பிணிகள் என்பதும் தெரியவருகிறது. இந்த கருப்பையிலிருந்து வரும் சத்தமென்பது 18 முதல் 20 வாரங்கள் வரை கணக்கிடப்பட, 90 சதவிகித முடிவுகளையும் அளித்திருக்கிறது. இந்த முடிவின் இறுதியில் 47 முறை சரியானதாகவும், 27 முறை தவறானதாகவும் கிடைத்திருக்கிறது.

இந்த கோட்பாடு பற்றி ஒருவர் கூறுகையில்,

நானும் என் தோழிகளும் இந்த அல்ட்ரா சவுண்ட் முறையை முயன்று பார்த்தோம். நான் ஒன்றும் கதிரியக்க வல்லுனர் இல்லை என்பதால் நச்சுக்கொடி எங்கே இருக்கிறது என புகைப்படம் கொண்டு முடிவுசெய்ய முடியவில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில்... முதல் அல்ட்ரா சவுண்ட் என்பது இடுப்பிலிருந்து வருவதால் புகைப்படம் புரட்டப்பட்டு தெரியும். அப்படி இருக்க, உங்களால் எப்படி கண்டுபிடிக்க இயலும் என்கிறார்.

எனவே, ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை விடுத்து., அவரவர் வாழ்வில் ஆண், பெண் இருவராலும் ஆயிரம் அழகு மாற்றங்கள் உண்டு என்பதை புரிந்து மனதை ஒருநிலைப்படுத்தி கொள்வது மிக நல்லது. மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாக எந்த வித சோதனையையும் செய்ய முயலாதீர்கள். எப்போதும் சூழ்நிலை நமக்கு சாதகமாக மட்டுமே இருக்கும் என நம்மால் சொல்ல இயலாது அல்லவா?

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க... 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon