Link copied!
Sign in / Sign up
1
Shares

கருவில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு விக்கல் எடுக்குமா?

ஒரு பெண், தான் கர்ப்பிணி என்பதை அறிந்த நிமிடம் அடையும் சந்தோசத்தை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அப்படி இருக்க, தன் இதழ் விழுங்கும் சாதம் கண்டு தன் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு அந்த உணவு சென்று சேருமா? தன் கருவில் வளரும் குழந்தைக்கு எல்லா விதமான வசதியும் தன் வயிற்றுப்பகுதியில் கிடைக்கிறதா? என அவள் பல குழப்பங்கள் கொள்வது வழக்கம். அவற்றில் ஒன்று தான், கருவில் இருக்கும் சிசுவிற்கு எடுக்கும் விக்கல் என்பது...

பொதுவாக கருவில் வளரும் குழந்தைக்கு விக்கல் எடுப்பது வழக்கமான ஒன்று தான். அதுபோல், பிறந்த குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் தலையில் தட்டிக்கொடுக்க தாய்மார்கள் பயப்படுவார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா? உங்கள் குழந்தையின் உச்சந்தலையானது மிகவும் மென்மையாக இருப்பதாலே. உங்கள் குழந்தையின் தலையானது மிகவும் மிருதுவாக இருக்க, கையை வைத்தால் நமக்கே ஒரு பயம் உண்டாகும். எங்கே தன் மகன் சருமம், நம் கைகளால் பாதிக்கப்பட்டு விடுமோ எனும் அச்சம் தான்.

உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு... இந்த விக்கல் என்பது, முதல் மூன்று மாதத்தின் இறுதியில் அல்லது நான்காம் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்குகிறது. இருப்பினும், 27 வாரங்கள் வரை விக்கலை உங்களால் உணர முடிவதில்லை. உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு விக்கல் எடுக்கும்போது அதன் நிலையானது மாறக்கூடும். இதனால், அக்குழந்தை கருவில் சுற்ற, சில சமயத்தில் உதைக்கவும் செய்யக்கூடும். அந்த உதையின் மாற்றத்தை கண்டுகூட, உங்கள் குழந்தைக்கு விக்கல் எடுப்பதை நாம் உணரலாம்.

உங்கள் குழந்தைக்கு விக்கல் எடுக்கும்போது லேசாக அசைவான். இந்த உணர்வை ஒரு நாளில் பலதடவையோ அல்லது ஒருமுறையோ உங்களால் உணர முடியும்.

இந்த விக்கலை குறைக்க, உணவு அருந்திய பின்னர் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நலம். தண்ணீர் உங்களுக்கு தேவை என்பதை உங்கள் தாகம் மூலம் தெரிந்துகொண்டாலும், கருவில் இருக்கும் குழந்தைக்கு தாகம் எடுப்பதை எப்படி உங்களால் உணர முடியும்?

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon