Link copied!
Sign in / Sign up
71
Shares

கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி - மாதம் மாதம்


ஒவ்வொரு மாதமும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி குறித்து ஒரு வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

முதல் மாதம்

ஒரு முட்டை, கருவுற்ற பிறகு அதை சுற்றி ஒரு நீர் பை போன்று ஒன்று உருவாகி, அது மெல்ல மெல்ல தண்ணீரால் நிரப்பப்படுகிறது. இதை ஆம்னியோடிக் சாக் என்று அழைப்பார்கள். இது தான் வளரும் கருவை பாதுகாக்கிறது. அதே சமயம் உருவாகும் நஞ்சுக்கொடி. தாயிடம் இருந்து குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பரிமாற்ற உதவுகிறது.

முதலில் முகத்தின் வடிவம், கண்களுக்கான பெரிய வட்டங்களுடன் உருவாகும். முகத்தின் மற்ற பாகங்கள் உருவாக ஆரம்பிக்கும். மேலும், இரத்த ஓட்டம் தொடங்கும். முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை 1/4 அங்குல நீளமிருக்கும். இது ஒரு அரிசியின் அளவே ஆகும்.

இரண்டாவது மாதம்

முகத்தின் மற்ற பாகங்கள் வளர துவங்கும். கை மற்றும் கால் விரல்கள் வளர துவங்கும். மத்திய நரம்பு மண்டலம் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கும். பிற உடல் உறுப்புகள் வளர தொடங்கும்.

தலை உடலை விட பெரியதாய் இருக்கும். 6ஆவது வாரத்தில் குழந்தையின் இதய துடிப்பை கேட்க முடியும். இப்போது தான் உங்கள் குழந்தையை கரு என்று அழைப்பார்கள்.

மூன்றாவது மாதம்

குழந்தையின் கை, கை விரல்கள், கால், கால் விரல்கள் அனைத்தும் முழுமையாக வளர்ந்திருக்கும். கை மற்றும் கால் நகங்கள் உருவாக ஆரம்பிக்கும். இனப்பெருக்க மற்றும் சிறுநீர் உறுப்புக்கள் உருவாக ஆரம்பிக்கும்.

மூன்றாவது மாதத்தின் முடிவில், அனைத்து உறுப்புகளும் உருவாகிவிடும். ஆனால் அனைத்தும் முழுமையாக செயல்பட துவங்காது. குழந்தை, 4 அங்குல நீளமும், 1 அவுன்ஸ் அதாவது 0.02 கிலோ எடையும் இருக்கும்.

நான்காவது மாதம்

டாப்ளர் என்று அழைக்கப்படும் ஒரு கருவி மூலம் உங்கள் குழந்தையின் இதய துடிப்பை நீங்கள் கேட்கலாம். கண் இமைகள், இமை முடிகள், புருவங்கள் மற்றும் முடி உருவாகிவிடும். எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, உங்கள் குழந்தையால் கை சூப்ப முடியும், கொட்டாவி விட முடியும், நீட்டி நெளிக்க முடியும்.

நான்காவது மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை சுமார் 6 அங்குலம் நீளம் இருக்கும்.

ஐந்தாவது மாதம்

உங்கள் குழந்தையின் அசைவுகளை உங்களால் உணர முடியும். உங்கள் குழந்தையின் தோளில், முதுகில் முடிகள் வளர ஆரம்பிக்கும். இது உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்காக தான் வளர்கிறது. குழந்தை பிறந்த 1 வாரத்தில் இவையெல்லாம் உதிர்ந்துவிடும்.

ஐந்தாவது மாதத்தின் இறுதியில் உங்கள் குழந்தை 10 அங்குலம் நீளம், அரை கிலோ எடையிலும் இருக்கும்.

ஆறாவது மாதம்

உங்கள் குழந்தை கண்களை திறக்க ஆரம்பிக்கும். குழந்தையின் தோல் சிவப்பு நிறத்திலும், சுருக்கங்களுடனும் இருக்கும். வெளியுலக சத்தங்களுக்கு உங்கள் குழந்தை அசைவுகள் மூலம் பதிலளிக்கும்.

இந்த நேரத்தில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமார் 12 அங்குல நீளமும் 1 கிலோ எடையிலும் இருப்பார்கள்.

ஏழாவது மாதம்

குழந்தையின் உடலில் கொழுப்புகள் உருவாக ஆரம்பிக்கும். மேலும், குழந்தையின் கேட்கும் திறன் முழு வளர்ச்சியடைந்திருக்கும். குழந்தையின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். மேலும், அவர்கள் சத்தம், வெளிச்சம், வலி போன்றவற்றிக்கு பதிலளிப்பார்கள்.

ஆம்னியோடிக் திரவம் குறையும். இப்போது குழந்தை 12 அங்குல நீளமும் 1-2 கிலோ எடையும் இருக்கும்.

எட்டாவது மாதம்

உங்கள் குழந்தையின் மூளை இந்த நேரத்தில் அதிவேகமாக வளரும். அதே சமயம் குழந்தை அதிகமாக உதைக்கும். நுரையீரல்களைத் தவிர்த்து உள் உறுப்புக்கள் பெரும்பாலானவை முற்றிலும் வளர்ந்திருக்கும். உங்கள் குழந்தை 18 அங்குலம் நீளமும் இரண்டரை கிலோ எடையும் இருக்கும்.

ஒன்பதாவது மாதம்

உங்கள் குழந்தையால் கண்களை சிமிட்ட முடியும், தலையை திருப்ப முடியும், ஏன் கெட்டியாக பிடித்துக்கொள்ளவும் முடியும். உங்கள் குழந்தை இவ்வுலகத்திற்கு வர முழுமையாக தயாராகிவிட்டது. பிரசவத்திற்கு ஏற்றார் போல் உங்கள் குழந்தை தன் நிலையை மாற்றி தலைக்கீழாக பிறப்புறுப்பை நோக்கி திரும்பும்.

குழந்தை இப்போது 18-20 அங்குல நீளமும், இரண்டரை முதல் மூன்று கிலோ வரை எடையும் இருக்கும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon