Link copied!
Sign in / Sign up
544
Shares

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சொல்லும் - சீன பாலின அட்டவணை (chinese gender chart)

ஒரு பெண் கருத்தரிப்பது அவள் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று. அவளை சார்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் தருணம். கருத்தரித்த பின் குழந்தையின் பாலினத்தை அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். கருவில் இருப்பது குட்டி இளவரசனா அல்லது அழகிய தேவதையா என தெரிந்து கொள்ளும் ஆர்வம் பெற்றோருக்கு அளவிற்கு அதிகமாகவே இருக்கும். கர்ப்பிணியின் உடல் அமைப்பு மற்றும் உணவு முறைகளை பொறுத்து சில கணிப்புகளை கூறுவார்கள் பெரியவர்கள். தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தாயின் வயதை பொறுத்து தீர்மானிக்கலாம். சீன பாலின அட்டவணையில் கருத்தரித்த மாதம் மற்றும் வயதை  சார்ந்து குழந்தையின் பாலினத்தை எப்படி கண்டறிய முடியும் என பார்க்கலாம். 

நீங்கள் கருத்தரித்த மாதம் எது? நீங்கள் கருத்தரித்த போது வயது என்ன?

கருவில் இருப்பது என்ன குழந்தை என்பதை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறிய முடியும். ஆனால், அது சட்டத்திற்கு புறம்பானது. இங்கு சீன பாலின அட்டவணை மூலம் குழந்தையின் பாலினத்தை நம்மால் அறிய முடியும்.

சீன பாலின அட்டவணையின் வரலாறு

இது ஒரு பழைய சீன இரகசியம். இதன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிய முடியும் என நம்பப்படுகிறது. இது புத்தகங்களின் மாற்றம் எனப்படும் சீன புத்தகத்தை சார்ந்து எழுதப்பட்டது.

இந்த சீன அட்டவணை 300 ஆண்டுகள் பழமையானது. சீன அரசர் குழந்தையின் அவர் குழந்தையின் பாலினத்தை அறிவதற்காக உருவாக்கப்பட்டது. அது சின் தூணின் கீழ் புதைக்கப்பட்டுவிட்டது என்று சிலரால் சொல்லப்படுகிறது. நீண்ட நாள் தேடலுக்கு பின் அது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அறிவியல் பூர்வமான சான்றுகள் ஏதுமில்லை.

சீன பாலின அட்டவணை எவ்வளவு துல்லியமானது?

இதை உண்மை என 50 சதவீதம் நம்பலாம். ஆனால், இது 90 சதவீதம் உண்மை என பெரும்பாலானோர் நம்புகின்றனர். இதை யாரும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை.

சீன பாலின அட்டவணை எப்படி செயல்படுகிறது?

உங்கள் குழந்தையின் பாலினத்தை சீன அட்டவணை மூலம் அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? அதற்கு நீங்கள் கருத்தரித்த மாதம் மற்றும் வயதை அறிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில், உங்கள் கருவில் இருப்பது தேவதையா அல்லது இளவரசனா என கண்டறிய முடியும்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வரைபடத்தில், உங்கள் கர்ப்ப மாதம் மற்றும் வயதின் அடிப்படியில் உங்களுக்கான கட்டத்தை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான கட்டம் ப்ளூ என்றால், உங்கள் கருவில் இருப்பது இளவரசன். அதற்கு மாறாக உங்களது கட்டம் பிங்க் என்றால், உங்கள் கருவில் இருப்பது குட்டி தேவதை என அறியலாம்.

இரண்டில் எந்த குழந்தை என்றாலும், அதற்கு நீங்களே பொறுப்பு. இருவரும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்ப வரப் போகும் செல்வங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon