Link copied!
Sign in / Sign up
2
Shares

கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்

உங்களுக்கு தெரியுமா? கர்ப்பத்தின் இரண்டாவது மாத முடிவில் குழந்தையின் இதயம் இயங்க துவங்கி இருக்கும். இன்னும் பல ஆச்சர்யமான மாற்றங்கள் நிகழ துவங்கி இருக்கும். நீங்கள் செய்யும் பல விஷயங்களுள் ஒன்றாக உங்கள் குழந்தையை கருவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவசியமானவற்றில் முதலிடத்தில் இருப்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சரியாக உட்கொள்வது. அவை குழந்தையின் இதயத்தை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதாக இருக்க வேண்டும். இங்கு கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள் பற்றி பார்க்கலாம்.

1 புரதம்

புரதத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் வளரும் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு கட்டுமானக் கட்டங்களாக வேலை செய்கின்றன. இறைச்சி, மீன், கோழி போன்றவை அசைவ புரதத்தின் பெரிய ஆதாரங்களாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். நீங்கள் சைவ உணவு சாப்பிடும் நபர் என்றால், பீன்ஸ், பால் மற்றும் சீஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் தேவையான புரதத்தை பெற முடியும்.

2 நட்ஸ் (விதைகள்)

முந்திரி, பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றில் புரதம் மற்றும் காப்பர் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் மகப்பேறு மருத்துவர்கள், 5 பாதாம் பருப்புகளை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை உட்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இதை தினமும் செய்து வருவது தாய் மற்றும் சேய்க்கு நன்மை பயக்கும்.

3 கீரைகள்

கீரைகள் எப்போதும் ஆரோக்கியத்தை தரக் கூடியவை. இருப்பினும் கர்ப்பகாலத்தில் அவற்றின் பயன்கள் ஏராளம். ஆனால், கீரைகள் மட்டும் சாப்பிட வேண்டுமா என சலிப்படைய தேவை இல்லை. முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, களைக்கோசு, காலே அல்லது கீரைகள். இந்த ருசியான கீரைகளைப் பயன்படுத்தி கறி, சாலடுகள் மற்றும் ஜூஸ் செய்யலாம்.

4 முழு தானியங்கள்

கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி, பார்லி மற்றும் கம்பு - இந்த முழு தானியங்கள் அனைத்தும் வலுவான இதயத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. வெள்ளை பிரெட்டிற்கு பதிலாக பிரவுன் பிரெட்டையும் அல்லது தானியங்களையும், சாதாரண அரிசிக்கு பதிலாக வரகரிசியையும் எப்படி உங்கள் தினசரி உணவில் சேர்க்கலாம் என்பதையும் ஆட்டா மற்றும் ஓட்ஸ் விளம்பரங்களின் மூலம் அறிய முடியும்.

5 பால் பொருட்கள்

பால் பொருட்களில் அதிக அளவில் கால்சியம் நிறைந்திருக்கிறது. இவை குழந்தையின் வளர்ந்து வரும் எலும்புகளுக்கு அத்தியாவசியமாகிறது. பதப்படுத்தப்படாத பாலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் பால் பாக்கெட்டுகள் பதப்படுத்தப் பட்டவையாக தான் இருக்கும். பால் பொருட்களை உட்கொள்ளும் முன் பாக்கெட்டுகளில் இருப்பவற்றை பரிசோதித்து பின் சாப்பிட வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமாக கருதப்படுகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon