Link copied!
Sign in / Sign up
2
Shares

கருவில் இருக்கும் குழந்தைகள் இதயத் துடிப்பு சத்தம்? கேட்பது முறைதானா?

ஒவ்வொரு தாயின் முதல் ஆசை என்ன தெரியுமா? அது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை முதன்முதலில் கேட்பது தான். ஆனால், குழந்தையின் இதயத்துடிப்பை சீராக்க இயற்கையிலே கர்ப்பிணிகளுக்கான பல உணவுகள் இருக்க, குழந்தையின் இதயத்துடிப்பை அடிக்கடி அறிய ஆசைப்படுவதால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறது உண்மை. அதற்கு முதலில் கருவில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பை கண்டறிவதை பற்றி நாம் பார்க்கலாம்.

கரு இதய துடிப்பு பரிசோதனை என்றால் என்ன?

இந்த கருவியானது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை படம்பிடித்து காட்டக்கூடிய ஒன்றாகும். இந்த கருவியின் மூலம் நாம் முதன் முதலில் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க, அதனால் ஏற்படக்கூடிய ஆனந்தத்திற்கு ஏது எல்லை என்கின்றனர் கர்ப்பிணி பெண்கள். 

இதற்காக ஒலி அலைகள் பயன்படுத்த, அதன் மூலமாக தான் உங்கள் குழந்தைகளின் இதயத்துடிப்பை நீங்கள் கேட்கிறீர்கள்.

எப்படி பயன்படுத்தப்படுகிறது?

கர்ப்பிணிகள் மெல்ல படுக்கவைக்கப்பட, உங்கள் ஆடைகளை அகற்ற வேண்டிய அவசியம் என்பது இல்லை. ஆடையை லேசாக இறக்கினால் போதுமானது.

ஆரோக்கிய வல்லுனர் ஜெல்லி போன்ற ஜெல்லை வயிற்றில் விடுவார்கள். இந்த ஜெல், இந்த இடத்தில் இணைப்பு முகவராக செயல்படும். இதனால் நடுநிலை சத்தம் என்பது குறைந்து உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க தூண்டும். அந்த ஜெல் மீது டாப்ளர் எனும் கருவி வைக்கப்பட, உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை உங்களால் கேட்க முடியும்.

இது பாதுகாப்பா?

நிச்சயமாக, முறையான வழியில் இது செய்யப்படுவதால் எந்த வித ஆபத்தும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இல்லை.

எதை தவிர்க்க வேண்டும்?
1. தவறான எண்ணம்:

குழந்தையின் இதயத்துடிப்பை முறையாக மருத்துவர் உதவியுடன் தெரிந்துகொள்வது நல்லது. வீட்டிலேயே நீங்கள் டாப்ளர் பயன்படுத்த முயல, பதட்டத்தால் ஒலி அளவை குறைத்து வைத்துவிட்டு கதறுவதில் எந்த பயனுமில்லை. நீங்கள் செய்யும் முறை தவறாக இருப்பின், குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியாமல் செல்வதோடு, தேவையற்ற பயத்தையும் உங்களுக்கும், உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து தந்திடும்.

2. குழந்தையின் நிலை:

வீட்டிலேயே முயற்சி செய்யும்போது குழந்தையின் நிலையால் குழப்பம் வரலாம். உங்கள் குழந்தை தலைகீழாக இருக்குமெனில், இதயத்துடிப்பு எப்பக்கம் இருக்குமென தெரியாமல் டாப்ளர் பயன்படுத்துவதில் பயனில்லை.

 

 

 

3. கேட்பதை உணருங்கள்:

குழந்தையின் இதயத்துடிப்பு என்பது 5ஆவது வாரத்தின் இறுதியில் தொடங்குகிறது.

இதயத்துடிப்பு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றத்துடன் இருக்கிறது.

9 வாரத்தில், ஒரு நிமிடத்திற்கு 175 முறை துடிக்கவும் செய்கிறது.

வீட்டிலிருந்து இதயத்துடிப்பை நீங்கள் கேட்க, இந்த மாறுதல்கள் தேவையற்ற பயத்தை மனதில் தரலாம். அதனால் தவிர்ப்பது நல்லது.

4. தவறான எண்ணங்கள்:

டாப்ளர் பயன்படுத்தி குழந்தைகளின் இதயத்துடிப்பை கேட்கும்போது எல்லாமே சரியாக இருக்கிறது என உங்கள் மனம் நினைத்தால் நல்லது. ஒருவேளை நீங்கள் ஏதேனும் எதிர்மறையாக நினைப்பீர்கள் எனில் அது மிகவும் ஆபத்தை மனதளவில் தந்துவிடும் என்பது தான் உண்மை. 

ஒருசிலர் தவறான கண்காணிப்பால் மருத்துவமனைக்கு செல்வதை கூட தாமதப்படுத்தி வீட்டிலேயே மகிழ்வுடன் இருப்பார்கள். இதுவும் தவிர்க்க வேண்டிய விஷயமாகும். 

டாப்ளர் என்பது குழந்தைகளின் இதய துடிப்பை நாம் உணர வைக்கும் அழகிய தருணம் என்றாலும், அதை தவறான முறையில் பயன்படுத்துவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை புரிந்து, மருத்துவமனைக்கு சென்று முறையான வழியில் உங்கள் குழந்தைகளின் விலைமதிப்பற்ற அழகிய துடிப்பை காண முயல்வது நன்மை பயக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாமே...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon