Link copied!
Sign in / Sign up
35
Shares

கருவறையில் சிசுவின் மாத ரீதியான வளர்ச்சி..!!


தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு, உருவான அக்கணம் முதல் வளர்ச்சி பாதையில் கம்பிரமாக, ஒன்பதாம் மாதம் வரை கருவறைக்குள் நடைபோட்டு வருகிறது.. அக்கரு குழந்தையாய் பிறந்தபின் அதன் வளர்ச்சியை நம்மால் கண்கூட காண இயலும்; ஆனால், கருவிற்குள் குழந்தை உருவாகி, வளரும் விதத்தை நம்மால் காண முடிவதில்லை. அக்குறையை போக்கவே, இந்த பதிப்பு; இதில் குழந்தை உருவான கணம் முதன் முதலில் எந்த உறுப்பு உருவாகிறது, எப்படி வளர்கிறது என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!!

 

மாதம்-1:

கருவானது, கருப்பையின் சுவர்களைப் பற்றி பிடித்து வளரும்; இக்காலகட்டத்தில் சிசு 3 பாகங்களாக தெரியும்.

முதல் பாகம்:  நரம்பு மண்டலம், மூளை, கண், காது, சருமம் போன்றவைகளாக மாறும்.

இரண்டாம் பாகம்: சுவாசக் கட்டமைப்பு, வயிறு.

முன்றம் பாகம்: இதயம், இரத்தம், தசை, எலும்புகள் 

மாதம்-2: 

கருவிற்கு முகம் உருவாகிறது; பின் கண் பகுதியின் குழி தோன்றும். சுவாசப்பகுதி, இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும்; இதயம் மெதுவாக செயல்படத்தொடங்கும்.

 

மாதம்-3: 

சிசுவின் உடலைவிட இப்பொழுது, தலை பெரியதாக இருக்கும்; இதயம் துடித்துக்கொண்டிருக்கும். சிசுவின் இதயத்துடிப்பை அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் அறியலாம்.

மாதம்-4:

சிசுவின் புருவம், தலை முடி போன்றவை லேசாக வளர்ந்து இருக்கும்; கண்கள் மூடியிருக்கும்.

மாதம்-5: 

இம்மாதத்தில் தான் தாயால் சிசுவின் அசைவை உணர முடியும்.. "லாலுனுகோ" எனும் மிக மென்மையான ரோமங்களால் சிசுவின் உடலானது முழுவதுமாக மூடப்படும்; பிரசவத்திற்கு முன்புதான் அந்த ரோம கட்டமைப்பு மறைந்துவிடும்.

மாதம்-6: 

சிசுவின் உடல் வளர்ச்சி முழுமையடைந்து குழந்தையாக உருவாகும்; சருமம் கெட்டிப்படும். "வெர்னிக்ஸ்" குழந்தையை மிகவும் பாதுகாப்பாய் முடிக்கொள்ளும்; தாயின் ஆம்னியாட்டிக் திரவத்திலிருந்து குழந்தை தனக்குத் தேவையான சத்துக்களைப் பெறும். இம்மாதத்தில் குழந்தையின் விக்கலை அம்மாவால் அறிய இயலும்.

மாதம்-7: 

இந்த மாதத்தில் தான், சிசுவின் கண் திறக்கும்; குழந்தையின் எடையானது ஒரு கிலோவாக மாறும்.

மாதம்-8: 

குழந்தையின் நகம் மற்றும் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்; மேலும் குழந்தை, கருப்பை வாயினை நோக்கி தலைகீழாகச் செல்லும்.

மாதம்-9:

குழந்தையின் ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும்; 8-10 முறை குழந்தையின் அசைவு தெரியும்; இந்நிலையில் குழந்தை பிரசவத்திற்கு தயராகும்; அதாவது இந்த மண்ணுலகைக் காண, பெற்றோரான உங்களைக்காண, குழந்தை பிறக்கத் தயாராகி விடும்..!!

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon