Link copied!
Sign in / Sign up
0
Shares

கருவானது தலைகீழ் நிலையிலிருந்தால், கர்ப்பிணிகள் செய்ய வேண்டியவை..!

கர்ப்பிணிகளே! உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை சரியாக வளர வேண்டியது அவசியம்; கருவின் சரியான வளர்ச்சிக்கு நீங்கள் ஆரோக்கியமான, அத்யாவசியமான உணவுகளை, உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் அவசியம். இந்த நிலையில், கருப்பையில் கருவானது திரும்பி தலைகீழாக வளர்ந்தால், அது பிரசவத்தின் போது அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.

அதாவது கருவில் குழந்தை எப்பொழுதும் தலை பாகம் கீழாகவும், கால்கள் மேலாகவும் வைத்து வளரும்; இந்நிலையில் பிரசவத்தின் போது முதலில் தலை வரும், பின்னர் உடல் வெளிப்படும். இதுவே குழந்தை பிரசவிப்பின் சரியான நிலை. ஆனால், கர்ப்பிணிகளில் சிலருக்கு சாதாரணமாக கரு இருக்க வேண்டிய நிலையிலிருந்து மாறி, தலைகீழாக இருந்தால், கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!

1. மருத்துவர்..

கருவில் உள்ள குழந்தையின் நிலையை 37வது வாரத்தில் மருத்துவரால், கண்டறிய இயலும்; இச்சமயங்களில் மருத்துவரிடம் version சிகிச்சை எடுத்துக்கொள்வது, குழந்தையின் நிலையை சரியாக மாற்ற 50% உதவும். இந்த version பற்றி தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்..!

2. நடைப்பயிற்சி..

குழந்தையின் நிலையை அறிந்த நீங்கள், நன்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பெரிய அடி கொண்ட நடைகளாக, பார்த்து கவனமாக நடக்க வேண்டும். இது குறித்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று பின் மேற்கொள்ளவும்..!

3. நீங்கள் தயாராக இருக்க வேண்டும்..

தவறான நிலையில் உள்ள குழந்தையை வெளியே கொண்டு வர நீங்கள் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அதிக அழுத்தம் கொடுக்க birthing ball எனக்கூறப்படும் பந்துகளும் உபயோகிக்கப்படலாம்.! இந்த விஷயத்தில் நீங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பது சிறந்தது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon