Link copied!
Sign in / Sign up
36
Shares

கருவாடு கத்திரிக்காய் தொக்கு செய்வது எப்படி?

கருவாடு என்று சொன்னாலே நாவில் எச்சில் சுரக்கும். அதில் கருவடைக் கொண்டு செய்த உணவு என்றால், சொல்லவே தேவையில்லை. மனம் அந்த உணவைச் சுற்றியே வட்டமிடும்; நாவும் கருவாடின் ருசியையே சுவைக்க ஏங்கிக் கொண்டிருக்கும்; நாவின் சுவை மொட்டுக்களோ மீண்டும் எப்பொழுது சுவைப்போம் என்று காத்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ருசியான கருவாடைக் கொண்டு தொக்கு செய்வது எப்படி என்று படித்தறிவோம்..!  

தேவையான பொருட்கள்!

கத்தரிக்காய் - 200 கிராம்/ சின்ன வெங்காயம் - 1/4 கிலோ/ கருவாடு - 100 கிராம்/ பெரிய தக்காளி - 2/ பச்சை மிளகாய் - 4/ பூண்டு - 4 பல்/ மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்/ மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்/ கறிவேப்பிலை - சிறிது/ தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்/ கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்/ கொத்தமல்லி - சிறிதளவு/ உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை 

1. கத்திரிக்காய், மிளகாய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்; பூண்டை நன்றாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

2. கருவாட்டை சுத்தமாக கழுவி, சிறிய துண்டாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து சேர்த்து, அவை வெடித்தவுடன், மிளகாய், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்; கலவை நன்றாக வதங்கியதம் கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

3. கத்திரிக்காய் பாதி வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மேலும் சற்று வதக்கவும்; தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

4. பின்பு கருவாடு சேர்த்து,10 நிமிடங்கள் வரை மூடி வைத்து விடவும். கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து நிலை வரும் போது, கொத்தமல்லி இலை தூவி, சற்று கிளறி இறக்கி பரிமாறவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon