Link copied!
Sign in / Sign up
0
Shares

கருத்தரித்தல் பற்றிய 6 கட்டுக்கதைகளும், உண்மையும்...

நீங்களும், உங்கள் துணையும் குழந்தையை உருவாக்க முயற்சிக்கிறீர்களா? கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கவும் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் அல்லது நீங்கள் இருவரும் கருத்தரிக்க வளமானவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல முட்டாள்தனமான அறிவுரைகளை கூறி இருப்பார்கள். உங்களுக்கு சொல்லப்பட்ட சில விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால், அவற்றில் பல மூடநம்பிக்கை மற்றும் கற்பனையானது. இங்கு கருத்தரித்தல் பற்றிய 6 கட்டுக்கதைகளை பார்க்கலாம்.

1. கால்களை உயர்த்துவது

உடலுறவில் ஈடுபட்டு முடித்தவுடன் 20 - 30 நிமிடங்கள் கால்களை உயர்த்தி வைத்திருப்பது, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பலரின் கருத்து. ஈர்ப்பு விசையின் காரணமாக விந்து கருமுட்டையை சென்றடையும் என்பதே இதன் பின்னணியில் இருக்கும் காரணம். அறிவியல்பூர்வமாக, ஒவ்வொரு துளி விந்திலும், போதுமான அளவு விந்தணுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை கருமுட்டையை சென்றடைவது உயிரியல் ரீதியாக திட்டமிடப்பட்டிருப்பதால் அதன் இலக்கை அடைவதற்கு ஈர்ப்பு விசை தேவைப்படாது. இதனால், கால்களை உயர்த்துவது குறிப்பிட்ட எந்த பலனையும் தராது.

2. தத்தெடுப்பது

ஒரு குழந்தையை தத்தெடுத்தால், கருத்தரிக்கலாம் என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், பல பெண்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்த பிறகும் கருத்தரிக்க இயலாமல் இருக்கிறார்கள். ஒரு குழந்தையை தத்தெடுத்த பின் சில பெண்கள் கருத்தரிப்பது என்பது எதேர்ச்சையான ஒரு நிகழ்வு. கருத்தரிப்பிற்கும், தத்தெடுப்பிற்கும் எந்தவித அறிவியல்பூர்வமான தொடர்பும் இல்லை.

3. பெண்கள் மட்டுமே காரணம்

கருத்தரிக்காமல் இருப்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமே நம்பப்படுகிறது. பெண்களின் உடலில் இருக்கும் பிரச்சனையின் காரணமாகவே, கருத்தரிக்க முடிவதில்லை என்னும் கருத்தும் பரவலாக காணப்படுகிறது. மலட்டு தன்மை என்பது ஆண்களிடமும் இருக்கலாம். ஆண்களின் உடலில் இருக்கும் பிரச்சனைகளும் கருத்தரிக்க இயலாமைக்கு காரணமாக இருக்கலாம். தம்பதிகள் இருவரும் முயற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே நல்ல பலனை தரும்.

4. அதிக உடலுறவு

தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து. பெண்களின் மாதவிடாய் முடிந்த பின்னான ஒரு சில நாட்களில் மட்டுமே, விந்தணு கருமுட்டையினுள் நுழைந்து கருத்தரிக்க இயலும். தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது,

5. இருமல் மருந்து

இருமல் மருந்தில் இருக்கும் மூலப்பொருட்கள், விந்தணு கருமுட்டையை விரைவாக அடைய உதவி எளிதாக கருத்தரிக்க செய்வதாக நம்பப்படுகிறது. இருமல் மருந்தில் இருக்கும் மூலப்பொருட்கள் கருப்பை வாயை திறக்க செய்து, விந்தணு கருமுட்டையை எளிதாக அடைய உதவுதாக நம்பப்படுகிறது. இதற்கு அறிவியல்பூர்வமான சான்று ஏதுமில்லை.

6. இரண்டாவது கர்ப்பம் தரிப்பது எளிது

பொதுவாகவே முதல் முறை கருத்தரித்துவிட்டால், இரண்டாவது முறை கருத்தரிப்பது எளிதான ஒன்று என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. பல இடங்களில் பெண்கள் இரண்டாவது முறை கருத்தரிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்களால் மட்டுமே, இரண்டாவது முறை எளிதாக கருத்தரிக்க முடிகிறது. இது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

உடல் மர்மமான வழிகளில் வேலை செய்கிறது. எனவே, எந்தவொரு விஷயத்திலும் 100% உறுதியளிக்கும் வழி இல்லை. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான உணவு முறைகளை பராமரிப்பது சிறந்தது. உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எடை குறைவாக உள்ள மக்கள் எளிதாக கருத்தரிக்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். மேலும், உங்கள் மாதவிடாய் சுழற்சியின் வளமான காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது நல்ல பலனை தரும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆரோக்கியமாக இருந்தும் கருத்தரிக்க இயலவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon