Link copied!
Sign in / Sign up
12
Shares

கருத்தரிக்க முயல்கையில், உண்ணக்கூடாத உணவுகள்..!

பெண்களின் வாழ்க்கை இலட்சியம் எதுவாயினும், இல்லற இலட்சியம் என்பது ஒரு குழந்தைக்கு தாயாவதே! பெண்களின் மகத்துவமான, ஒரு அற்புத அதிசய செயல் - பிரசவம்; 9 மாதங்கள் கர்ப்பம் தரித்து குழந்தையை பற்றி மட்டுமே எண்ணி, குழந்தைக்காகவே வாழ்ந்து, குழந்தையை பெர்றேடுத்து அதனை நன்முறையில் வளர்க்கவே தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணிக்கிறாள், பெண். 

அவ்வளவு முக்கியமான கருத்தரிப்பு அல்லது கருத்தரிக்க முயலும் போது, பெண்கள் சில உணவுகளை உட்கொள்ளக் கூடாது; ஏனெனில் இவ்வுணவுகளால், கர்ப்பம் கலைதல், பெண்ணின் உடலிற்கு ஆரோக்கிய கேடு போன்றவை ஏற்படலாம். ஆகையால், பெண்கள் கருத்தரிக்க முயல்கையில் உண்ணக்கூடாத சில உணவு வகைகள் பற்றி, இப்பதிப்பில் பார்த்தறிவோம்..!!

மீன்:

மீனில் உள்ள மெர்குரி எனும் பொருள் கருத்தரிப்பை தடுக்கலாம்; அதனால், கருத்தரிக்க முயல்கையில், மீனினை தவிர்த்து விடுதல் நல்லது.

சோடா:

 

 சோடா அதிகளவு சர்க்கரையைக் கொண்டது; இது பெண்களின் உடலிலுள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் காரணியாக மாறலாம். ஆகையால், பெண்களே சோடாவினை தவிர்ப்பது நல்லது. 

ஆல்கஹால்:

ஆல்கஹால் ஈசுத்துக்கொண்டாள், கருத்தரிப்பதில் பிரச்சனை மற்றும் கருச்சிதைவு ஏற்படலாம்; ஆகையால் இதனை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.

காபி:

காபியில் காஃபின் உள்ளது; இது பெண்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும் இது கரு உருவாவதற்கு தேவையான இரும்புச்சத்தினை உறிஞ்சி, கரு உருவாக்கத்தை தடுக்க வல்லது. 

சோயா:

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயா பொருட்கள் அதிகம் உட்கொள்வதால், கரு உருவாவதில் பிரச்சனை ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

வேக வைக்காத உணவு:

நன்கு வேகவைக்காத மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்ணுவதை கர்ப்பிணிகள் தவிர்த்திட வேண்டும்; குறிப்பாக சரியாக வேகாத இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon