Link copied!
Sign in / Sign up
23
Shares

கருப்பையை வலிமையாக்குவது எப்படி?

பெண்களே! நீங்கள் எந்த வயதினராயினும் உங்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை. நீங்கள் குழந்தையை பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில், முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், உங்கள் உடலின் இருப்பெலும்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

ஆகவே, உங்கள் இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாமா நண்பர்களே??

தேவையானவை..!

உளுந்து–2 தேக்கரண்டி, நெய்-2 தேக்கரண்டி, துருவிய வெல்லம்-1/2 கப், உலர் திராட்சை-10, பாதாம்/முந்திரி-6, தேங்காய்த்துருவல்-1 தேக்கரண்டி, ஏலக்காய்த்தூள்-1 /4 தேக்கரண்டி, பால்-1/2 லிட்டர்

செய்முறை..

1. உளுந்தை சிறிது நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்துவிடவும்  

2. பின் அது உலர்ந்தவுடன், மின் அரைப்பானில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று சுற்றவும்  

3. வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அரைத்த உளுந்தைப்போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்  

4. அதில் பாலைச்சேர்த்துக் கொதிக்க விடவும்  

5. பச்சை வாசனை போன பின், துருவிய வெல்லம்,  ஏலக்காய், திராட்சை, நெய்யில் வறுத்த தேங்காய்த் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேருங்கள்

 

6. பின், பாயசம் பதத்தில் வந்ததும் இறக்கி விடவும் 

இவ்வுளுந்து பாயசம் எலும்புகளை பலமாக்குகிறது; கருப்பை வலுவுக்கு மிகவும் நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon