Link copied!
Sign in / Sign up
14
Shares

கருப்பான முகத்தை வெள்ளையாக்க

பெண்கள் என்னதான் கருப்பாக கலையுடன் இருந்தாலும், அவர்களது முகத்தை வெள்ளையாக்க பல வழிகளை கையாள்வார்கள். பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அதில் முகப்பரு தான் முதன்மையானது. அதோடு அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். எனவே எண்ணெய் பசை சருமத்தினால் முகப்பொலிவை இழந்து இருப்போரின் முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில வழிகளை இங்கு பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு

சிறிது எலுமிச்சை சாற்றில், கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லுடன், சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி சாறு

தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் தேன்

குளிர்ந்த க்ரீன் டீ நீர்மத்தில் சிறிது தேன் மற்றும் அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகத்தின் பொலிவு மேம்படும்.

ஓட்ஸ் மற்றும் தயிர்

இரண்டு தேக்கரண்டி தயிரில், மூன்று தேக்கரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon