Link copied!
Sign in / Sign up
5
Shares

கருச்சிதைவு ஏற்பட்டதற்கு என்ன அடையாளம்?? எப்படி தவிர்ப்பது?

ஒரு பெண் தாய்மையடைவது என்பது அற்புதமான விஷயமாகும்; ஆனால் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளினால், கர்ப்பமாகும் அனைத்து பெண்களும் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கருப்பை உபாதைகள், தாயின் உடல் நிலை, கருவின் வளர்ச்சி பாதிப்பு, வேண்டாத கர்ப்பம் என்பன முக்கியமானவை.

கருச்சிதைவு என்பது பெண்ணின் கருப்பையில் கருவுற்ற கரு, மேலும் வளர்வதைை நிறுத்துதல்/கருவை சிதைத்தல் அல்லது கரு தானவே சிதைவடைதல் என பொருள் ஆகும். கருவானது உண்டான 24 கிழமைகளுக்குள் ஏற்படும் (அ) ஏற்படுத்தும் கருச்சிதைவு (miscarriage) மிஸ்கரேஜ் என்றும், கரு உருவாகி 24 கிழமைகளுக்கு மேற்பட்டிருப்பின் அக்கருச்சிதைவானது (abortion) அபோர்ஷன் என்று அழைக்கப்படும். இக்கட்டுரையில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான அடையாளங்கள் மற்றும் தவிர்க்கும் முறைகள் பற்றி படித்தறியலாம்..!!

ஏற்பட்டுள்ளதற்கான அடையாளங்கள்

கருச்சிதைவுக்கு 2 முக்கிய அடையாளங்கள் உண்டு; ஒன்று, பெண்குறியில் இரத்தப்போக்கு; மற்றொன்று, அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப்போக்கு முதலில் குறைவாக தொடங்கி, பின் அதிகரிக்கும்; அதைத்தொடர்ந்து வெகு விரைவில் இரத்தம் கட்டி கட்டியாக வெளிப்படும்.

கருச்சிதைவு, கர்ப்பகாலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.

தவிர்ப்பது எப்படி?

1. கர்ப்பம் என உறுதியான உடனேயே தம்பதியர் இருவரும் உடலுறவை நிறுத்திட வேண்டும்; இது கரு பாதிப்படையாமல் காக்கும்.

2. அதிகம் களைப்பு தரும் வேலைகளைப் பார்க்காதிருத்தல் நல்லது; மேலும் கருவுற்ற காலத்தில், நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

3. நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; மீறி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

4. கர்ப்பம் தரித்த நொடி முதல், குறைந்தது 3 மாதத்திற்காவது பயணங்களை தவிர்ப்பது நல்லது.

5. ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

6. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதை கட்டுப்பட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon