Link copied!
Sign in / Sign up
4
Shares

கருச்சிதைவுக்கு பின் கர்ப்ப ஆசையா? இதெல்லாம் மறக்காதீர்கள்...

இந்த உலகத்தில் ஒரு பெண்ணுக்கு சந்தோசத்தை தரும் முதல் விஷயம் அவள் கர்ப்பமாக இருப்பதுதான். அதேபோல், ஒரு பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு துயரம் எதுவென்றால்... கருச்சிதைவு தனக்கு ஏற்பட்டதை எப்படி தன் குடும்பத்திடம் சொல்வது என தெரியாமல் தவிப்பது தான். ஒரு பெண் கர்ப்பம் என்றவுடன் அவளை தூக்கிவைத்து கொண்டாட நினைப்பவர்கள், அதே கர்ப்பம் கலைந்துவிட்டது என்றவுடன் என்ன செய்வதென தெரியாமல் தவிக்க, அந்த பெண்ணால் மட்டும் அதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும். அவள் கொள்ளும் வேதனை மீண்டும் கர்ப்பமாக இருக்கும்போது அதை சொல்ல மறக்கவே பார்க்கிறது என்பது உண்மை. உங்களுக்கு கருச்சிதைவு கழித்து மீண்டும் கர்ப்ப ஆசை வருமெனில் ஒருசில விஷயங்களை மறக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

1. சோதனை அவசியம்:

ஒன்றுக்கும் மேற்பட்ட கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் உங்கள் உடல் இன்னொரு கர்ப்பத்துக்கு தயாரா என்பதை மருத்துவரிடம் பரிந்துரை செய்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒருமுறை கருச்சிதைவு ஏற்படும்போது அதன் மரபு ரீதியான ஒரு சில விஷயங்கள் பிறப்புறுப்பின் அருகாமையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனை சோதனை மூலம் கண்டறிய வேண்டியது முக்கியம். 

2. உங்கள் நிலை அறிதல்:

நீங்கள் 35 வயது உடையவராக இருந்தால் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்பின்னர் செயல்படுவது நல்லது. புகைப்பிடித்தல் பழக்கத்தினாலும் கரு மலட்டு தன்மை என்பது உண்டாகலாம்.

3. சுய மதிப்பீடு அவசியம்:

ஒருமுறை கருச்சிதைவு என்றால் உடனே மனம் தளர்வது உங்கள் மனதை மீண்டும் கர்ப்ப நிலைக்கு தள்ள முடியாமல் தவிக்க வைக்கும். எனவே, கருச்சிதைவுக்கு பின்னர் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் 100 சதவிகித தெளிவுடன் இருத்தல் வேண்டும்.

4. மன நிலை புரிதல்:

ஒரு பெண் கர்ப்பம் என்றவுடன் அடையும் எல்லையில்லா ஆனந்தம், அந்த கரு சிதையும் நொடியில் சுக்கு நூறாக உடைந்து போகிறது. அப்படி இருக்க சந்தோசம் என்பது துயரமாக மாறிவிடுகிறது. இந்த மாற்றத்தை மனதிலே போட்டு புதைத்து விடாதீர்கள். உங்கள் மன தைரியம் என்பதையும் பொறுத்து அடுத்த முறை கருவுற்று நீங்கள் காணப்பட வாய்ப்பு இருக்கிறது.

5. நம்பிக்கை வேண்டும்:

ஏதோ ஒரு நன்மைக்கே நம் கரு கலைந்திருக்கிறது என நினைத்து அதை கடந்து மீண்டும் எப்படி கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்வது என்பதை சிந்தியுங்கள். நம்பிக்கை என்பது உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மிக விரைவில் அழகிய குழந்தையை நீங்கள் ஈன்றெடுக்கலாம். நீங்கள் நம்பிக்கையற்று பயம் மற்றும் பதட்டத்துடன் மீண்டும் ஒரு குழந்தை பெற்றாலும், அவன் பயமற்று தைரியமாக பிறப்பான் என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? உங்களால் தான் உங்கள் குழந்தையும், அவர்கள் குணங்களும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

கருச்சிதைவு என்பது கவலை தரக்கூடிய ஒரு விஷயம் என்றாலும், நாளை பிறக்க போகும் குழந்தையை கண்டு இதுவும் கடந்து போகும் என்பதை உணருங்கள். எல்லாமே சாத்தியம் தான் இந்த உலகில்... வாழ்த்துக்கள்...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon