Link copied!
Sign in / Sign up
11
Shares

கரு தங்க பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள்..!

முன்னாளில் குழந்தை பெற வேண்டுமானால், கோவில் கோவிலாக சுற்றி வந்தனர்; இந்நாளில், குழந்தை பெற மருத்துவமனை முழுதும் சுற்றி வருகின்றனர், தம்பதியர். இதெல்லாம் வீண் செயலே! கருவுறுவதற்கு பெண்களான நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை சரியாக, சரியான நேரத்தில் செய்து விட்டால், பின் நீங்கள் கருவுருவதை யாராலும் தடுக்க இயலாது. அப்படி கருவுறுமுன் பெண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி படித்தறிவோம்..!!

உணவு..

பெண்கள் வேதிப்பொருட்கள் சேர்க்காத, கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லாத உணவுகளை, ஆரோக்கியமான உணவுகளை உண்டுவர வேண்டும். இது கரு உருவாக்காகவும், அதன் வளர்ச்சிக்கும் துணை செய்யும்..

சுத்தம்..!

உங்கள் உள்ளுறுப்புகளை சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக வைத்திருக்க வேண்டும்; உள்ளுறுப்புகள் சுத்தமாக நல்ல ஆரோக்கியமான உணவுகள்,தயிர், பழங்கள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உண்ண வேண்டும்..

போலிக் அமிலம்..!

போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை தினசரி உணவில், சேர்த்துக்கொள்ளுங்கள்; இது குழந்தையின் வளர்ச்சிக்கும், பிரசவத்திற்கும் மிகவும் உதவும்..

யோகா பயிற்சிகள்! 

யோகா செய்வது இரத்த ஓட்டத்தை சீர் செய்யும், இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், உடலிற்கு நல்ல வலிமையையும் தரவல்லது; மேலும் யோக பயிற்சிகளால், கருவளம் அதிகரிக்க வாய்ப்புண்டு.

மன அழுத்தம் 

கருத்தரிக்குமுன், கருத்தரித்த பின் மற்றும் குழந்தை பிறந்த பின் என எப்பொழுதும் மனதை மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இது குழந்தை ஆரோக்கியமுடன் உருவாக்கி, வளர உதவும்; மேலும் உங்கள் உடலுக்கும் நலம் உண்டாகும்..!

அக்குபஞ்சர் 

கருவுறுமுன் அக்குபஞ்சர் மருத்துவர்களை அணுகி, அக்குபஞ்சர் பயிற்சி பெறுவது கரு உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்..! ஆரோக்கியமும் மேம்படும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon