Link copied!
Sign in / Sign up
10
Shares

கர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...

மாதுளைப்பழம் என்பது முத்து போன்ற சுவைமிக்க மகத்தான ஒரு பழமும் கூட... இந்த பழத்தின் சுவையை இதழ்கள் கூறினாலும், நம் நாவானது மீண்டும் மீண்டும் வேண்டுமென மனதை தூண்ட செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாதுளை பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை என்றாலும், மகப்பேறுவில் இதனால் என்ன பயன் என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

இரத்த அழுத்தம் குறையும்:

இந்த மாதுளைப்பழத்தில் இருக்கும் வேதிப்பொருளும், தனிமங்களும் உங்களின் இரத்த அழுத்தத்தை தணிக்க உதவுகிறது. குறிப்பாக, மாதுளை இதயத்திற்கு மிகவும் நல்லது. மாதுளைப்பழம் இரத்த அழுத்தத்தை குறைத்து ப்ரீக்ளைம்சியா பிரச்சனையிலிருந்து கர்ப்பிணிகளை காப்பாற்றுகிறது.

வைட்டமின் சி:

மாதுளையில் வைட்டமின் சி அதிகமிருக்கிறது. அதனால், உங்களுடைய எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து காணப்படுகிறது. இந்த எதிர்ப்பு சக்தி என்பது உங்களுக்கு இரு மடங்கு தேவை. அதாவது உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் இந்த எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியமானது. அதனால், மகப்பேறு மாதங்களில் மாதுளையின் முக்கியத்துவம் என்பது மகத்தானது.

ஆக்ஸிஜனேற்றம் அடைதல்:

இந்த ஆக்சிஜனேற்றம் என்பது உங்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆம், இது நம் உடலின் செல்களை மீளுருவாக்கம் செய்ய, தேவையான அளவு ஆக்சிஜனும் நமக்கு கிடைக்கிறது. இதனால் நீங்கள் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருந்திட முடியும்.

எலும்பின் வலு அதிகரிக்கும்:

மாதுளை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் உங்கள் குழந்தையின் எலும்பு வலுவுடன் இருக்கிறது. 

சரும சிக்கல்கள் நீங்கும்:

உங்கள் வயிற்று பகுதி உப்பி காணப்படும்போதும் இயற்கையான பளபளப்பை தந்து உங்களை அழகாக்க மாதுளை உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு சரும பிரச்சனையான பருக்கள் போன்றவை வரக்கூடும். இவை அனைத்தும் மாதுளையால் மறைந்து போகிறது.

பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு:

தொற்று கிருமிகள் கர்ப்பிணிகளை தொடாமலிருக்க மாதுளை சாப்பிடுவது மிக நல்லது. மாதுளை சாப்பிடுவதால்... தாய், சேய் இருவர் உடலும் கிருமிகள் அற்று ஆரோக்கியமாக இருந்திடும்.

நார்சத்து:

உங்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்தை மாதுளை தருகிறது. கர்ப்பிணிகள் வழக்கமாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று மலச்சிக்கல். உங்கள் வயிற்றில் ஏற்படும் மாற்றத்தால் மலச்சிக்கல் என்பது ஏற்படுவது இயல்பான விஷயம் தான். மாதுளைப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் நீங்கும்.

இரும்புச் சத்து:

இரும்புச்சத்து என்பது தாய், குழந்தை இருவருக்கும் அவசியமான ஒன்று. குழந்தை சரியான நேரத்தில் பிறக்கவும், பிறந்த குழந்தை சரியான வளர்ச்சியுடன் இருக்கவும் இரும்புச்சத்து என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமாகிறது. மருத்துவர்கள் கூட முதலில் பரிந்துரைப்பது இரும்புச்சத்து அடங்கிய உணவை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும் என்பது தான்...

மூளையின் திசுக்களை பாதுகாக்கும்:

மாதுளைப்பழம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மூலம் இது நிரூபணம் ஆகி இருக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளை மிகவும் நல்லது. மாதுளையை மகப்பேறு காலத்தில் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடும். 

மாதுளை பழம் பலவித சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். இந்த மாதுளை பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை அடங்கியிருக்க, தாதுக்களான இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவையும் அடங்கி இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு, கருவில் இருக்கும் குழந்தையின் நலன் என்பது மிகவும் அவசியம். ஆதலால், மாதுளை சாப்பிடுவது மிக நல்லது. இந்த மாதுளைப்பழம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால், மருத்துவரின் பரிந்துரையுடன் நீங்களும் இந்த பழத்தை சாப்பிட்டு உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அழகான தருணத்தை அமைத்து தரலாமே.

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon