Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பிணிகளின் கால் பகுதி பெரிதாவது எதனால்? தடுப்பது எப்படி?

கர்ப்பிணிகள் உடலில் பல வித மாற்றம் காண, ஒரு சில பெண்கள் தன் விரல்கள் பெரிதாவதை கண்டிருக்கக்கூடும். இதற்கு என்ன காரணம்? சுவாரஸ்யமான பதில்கள் இதோ உள்ளே...

கால் விரல்கள் கர்ப்பிணிகளுக்கு இயற்கையிலே பெரிதா? இல்லை, கர்ப்ப மாற்றத்தில் இதுவும் ஒன்றா? என ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்காக 49 பெண்களின் கால்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அவற்றில் 60 முதல் 70 சதவிகித பெண்களுக்கு கால் நீளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எதனால் கால்கள் பெரிதாகிறது?

அதாவது கர்ப்பத்தின் போது உங்க வயிறு மட்டும் பெரிதாவதாக நீங்கள் நினைப்பது தவறு. கர்ப்பமாக இருக்கும் உங்களுக்கு ஹார்மோன்கள் தூண்டுதல் காணப்பட, கால்களுக்கு இடைப்பட்ட பகுதி தளர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் பிரசவத்தின் போது குழந்தை வெளியாவதற்கு எளிதாக இருக்கக்கூடும். இதே போன்ற ஹார்மோன் கால்களிலும் சுரக்கிறது. அத்துடன் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் கால்களையும் சேர்த்து அழுத்த, இதனால் கால்கள் பெரிதாக வாய்ப்பிருக்கிறது. ஆம், கால்களில் வலி என்பது ஏற்பட, இதனால் ஒரு அசவுகரிய நிலை என்பது உருவாகிறது. 

கால்கள் என்பது 26 எலும்புகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்க, 30 இணைப்புகளை தசை நார்களுடன் இணைத்து கொண்டிருக்கிறது. கர்ப்பத்தின்போது, ஒட்டு மொத்த உடலிலும் தசை நார்கள் என்பது தளர்வடைந்து காணப்படுகிறது. 

 
எப்படி தடுப்பது?
1. காலணிகள் அணியலாம்:

உங்கள் கர்ப்ப காலத்தில் கால்களுக்கு ஏற்ற காலணிகள் அணிவதன் மூலம் கால்கள் பெரிதாவதை தடுக்கலாம்.

2. சுருக்கமான காலுறைகள்:

இது உங்கள் கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

3. கால்களுக்கு ஓய்வு:

உங்கள் கால்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை நீங்கள் தர முயலாதீர்கள்.

4. முறையான பயிற்சி:

உங்களுடைய மருத்துவரிடம் பரிந்துரை பெற்று சரியான பயிற்சிகளை செய்வதன் மூலமாக கால் பெரிதாவதை தடுக்கலாம். இதனால் கால்களின் தசைகள் வலுவுடன் இருக்க வலியும் குறையக்கூடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon