Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அரிப்பு ஏற்படுவது எதனால்? தீர்வு என்ன?

கர்ப்பிணிகள் பலவித மாறுதலை தன் உடலில் சந்திப்பது வழக்கம் தான். அவற்றில் ஒன்று வயிற்றில் ஏற்படும் அரிப்பு. அதாவது உங்கள் வயிறு பெருக...பெருக இந்த அரிப்பு என்பது அதிகரிக்கிறது. இதற்கு காரணம், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமும், சருமமும் தான். உங்கள் வயிற்றில் ஏற்படும் அரிப்பு அதிகமானால்...உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியமாகும்.

வயிற்றில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்?
1. வயிற்றின் அளவு பெருகுதல்

கருப்பை விரிவால் வயிற்றில் அரிப்பு என்பது ஏற்படுகிறது. உங்கள் சருமம் விரிந்து காணப்பட, ஈரப்பதம் குறைகிறது. இதனால் சருமம் வறண்டு அரிப்பு ஏற்படும். 

2. ஹார்மோன்களின் எழுச்சி

ஹார்மோன்களின் மாற்றத்தால் எஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் வயிற்றில் அரிப்பு என்பது ஏற்படக்கூடும்.

எப்போது மருத்துவர் உதவி தேவை?

1. வயிற்றில் ஏற்படும் அரிப்பு அதிகமானால்...அல்லது மற்ற உடல் பாகங்களில் அரிப்பு ஏற்பட்டால்

2. சருமம் வறண்டு வரும் அரிப்பு அல்லாமல் வேறு காரணத்தால் அரிப்பு உண்டானால்

3. உடல் முழுவதும் அரிப்பு பரவினால்

4. அரிப்பின் அறிகுறியால் சிறுநீர் மிகவும் கருநிறத்தில் வர, வாந்தி, குமட்டல், உடல் சோர்வு, பசியின்மை ஆகியவையும் காணக்கூடும்.

எப்படி தவிர்ப்பது?
1. ஓட்ஸ் குளியல்:

ஒரு கப் ஓட்ஸுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.  அதை கொண்டு குளித்தால் அரிப்பு நீங்கும். 

2. சமையல் சோடா குளியல்:

வெதுவெதுப்பான நீரில் அரை கப் சமையல் சோடாவை கலந்து கொள்ளுங்கள். அதை கொண்டு உங்கள் உடலை நனைத்திடுங்கள். சமையல் சோடா தேர்வு செய்யும்போது அரிப்பை தரக்கூடாததாகவும், அழற்சியை தரக்கூடாததாகவும் இருக்க வேண்டும். 

3. அலோ வேரா ஜெல்:

நீங்கள் குளித்து முடித்தவுடன் அலோ வேரா ஜெல்லை அரிப்பு இருக்கும் இடத்தில் தடவலாம். இதனால் அழற்சி என்பது குறையக்கூடும். அலோ வேரா ஜெல் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு... ஏதும் ஆபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கிறது.

4. குளிர்ந்த நீர்:

சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்க்கலாம்.

5. ஈரப்பதமூட்டி:

கொஞ்சமாக ஈரப்பதமூட்டி எடுத்து லேசாக தடவ வேண்டும். இதனால் அரிப்பு என்பது குறையக்கூடும்.

6. தேங்காய் எண்ணெய்:

அரிப்பு இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெய்யை தடவ, இதனால் அரிப்பு என்பது குறைகிறது.

7. ஆப்பிள் சாறு வினிகர்:

உங்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் அரிப்பை போக்க ஆப்பிள் சாறு வினிகரும் ரொம்ப நல்லது.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon