Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பிணிகளுக்கு குமட்டல் வரும்போது எலுமிச்சை பழம் சரிதானா?

கர்ப்பிணிகளுக்கு வாந்தி எடுத்தல் என்பது இயற்கையானதே. எனினும், இந்த புதிய செயலால் சிலர் எரிச்சலுடன் இருப்பதும் உண்டு. ஒருசிலர், சில பழங்களை தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று நுகர்வதால், இந்த வாந்தி பிரச்சனை என்பது சற்று நேரத்துக்கு குறைந்து காணப்படக்கூடும். எதனால் இந்த வாந்தி என்பது வருகிறது? இதை தவிர்க்க என்ன தான் வழி என்றெல்லாம் ஆய்வுகள் அவ்வப்போது சென்றுக்கொண்டு தான் இருக்கிறது.

இருப்பினும், பெரியவர்கள் சொல்வது என்னெவென்றால், எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால் இந்த குமட்டல் நிற்குமென கூறுகிறார்கள்.

எது எப்படியோ? இந்த குமட்டல் என்பது எலுமிச்சையினால் மட்டுமே நின்றுவிட போவதில்லை. நீங்கள் இருக்கும் சூழலும் தான் இதற்கு காரணமாக அமைகிறது. எலுமிச்சை மணத்தை முறியடிக்கும் ஒரு நாற்றம் வீசுமெனில் நம்மால் எப்படி தான் குமட்டல் இன்றி இருக்க முடியும். அத்துடன் மன அழுத்தம், உடல் சோர்வு, வெறும் வயிற்றுடன் இருத்தல் போன்ற காரணிகளாலும் கர்ப்பிணிகளுக்கு குமட்டல் என்பது வரக்கூடும்.

உங்கள் குமட்டல் அதிகரிக்கும் பட்சத்தில் டாக்டரை பார்ப்பது மிக நல்லது...

இல்லையேல், உங்கள் குமட்டலை தவிர்க்க இஞ்சி, எலுமிச்சை கொண்டு வாசனை நுகர்ந்து குமட்டலை விரட்டி அடிக்கலாம்.

எலுமிச்சை:

இந்த எலுமிச்சையை கர்ப்பிணி பெண்கள் நுகர்வதால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த எலுமிச்சையை நுகர்வதாலும், உண்ணுவதாலும், சுவைப்பதாலும் குமட்டல் என்பது குறையக்கூடும். ஒருவேளை எலுமிச்சை பழம் கிடைக்காவிட்டால்... எலுமிச்சையின் சாறை லேசாக ருசி பார்ப்பது, உங்கள் குமட்டலை குறைத்து தேவையான எதிர்ப்பு சக்தியை தந்த உணர்வையும் சேர்த்து தருகிறது.

அதேபோல் கர்ப்பிணி பெண்கள் எலுமிச்சை சாறையும் சாப்பிட்டு வரலாம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு கம்மியாக இருத்தல் வேண்டும். இதனால், உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. பதப்படுத்தப்பட்ட எலுமிச்சை ஜூஸை குடிப்பதற்கு பதிலாக ப்ரெஷ்ஷான லெமன் ஜூஸ் குடிக்க முயலுங்கள். அது தான் உங்கள் குழந்தைக்கும் நல்லது.

எலுமிச்சையை அதிகம் பருகுவதால், விரைவில் நச்சு நீக்கம் ஏற்படக்கூடும். எனினும், இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற ஒன்று என்பதை தெரிந்து அளவாக லெமனை எடுத்துக்கொள்ளுங்கள். 

எலுமிச்சையை உங்கள் உணவுடன் சேர்த்துக்கொள்ளும் முன்னர், பெண்ணோய் நிபுணர் டாக்டரிடம் பரிந்துரை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

இஞ்சி:

இந்த இஞ்சியின் வேர்த்தண்டை, கர்ப்பிணிகளின் குமட்டலுக்காக நூற்றாண்டு கடந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி தேநீர், இஞ்சி ஊறுகாய், இஞ்சியில் செய்த ஜாம் போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். சிலருக்கு ஜாம், ஊறுகாய் போன்றவை ஒவ்வாத நிலையையும் கர்ப்ப காலத்தில் உண்டாக்கும். அப்படி என்றால் தவிர்த்திடுங்கள்.  

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon