Link copied!
Sign in / Sign up
52
Shares

கர்ப்பிணிகளுக்கு 12 வழிகளில் கருணை காட்டும் தர்பூசணி...

தர்பூசணி பழத்தின் அருமை என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ...வேகாத வெயிலில் அலைக்கழிக்கப்படும் ஒருவருக்கு நன்றாகவே தெரியும். இந்த தர்பூசணி பழம் மிகவும் குளிர்ச்சியாக நம் உடலை வைத்துக்கொள்ள, மிக எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தர்பூசணி பழம் 12 வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு காவலனாக இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், கர்ப்பிணிகளுக்கு இந்த தர்ப்பூசணி பழம் எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

நெஞ்செரிச்சலை போக்கும்:

தர்பூசணி பழமானது உங்கள் வயிற்றுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை போக்க தர்பூசணி பழம் உதவுகிறது.

கால், கை வீக்கத்தை குறைக்கும்:

கர்ப்பிணி பெண்களுக்கு கால் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுவது இயல்பு தான். இருப்பினும், தர்பூசணி பழத்தில் இருக்கும் நீர் தன்மை, நரம்பு மற்றும் தசை பிரச்சனையை போக்குகிறது.

காலை சுகவீனத்தை குறைக்கும்:

காலையில் தர்பூசணி சாப்பிடுவதால் இந்த நாள் இனிய நாளாக புத்துணர்வுடன் உங்களுக்கு அமையக்கூடும். மேலும், தர்பூசணி பழத்தில் சத்துக்களும், ஆற்றல் நிறைந்த பண்பும் அதிகமிருக்கிறது. அதனால், ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸுடன் உங்கள் நாளை கர்ப்பிணி பெண்கள் தொடங்கலாம்.

உடல் வறட்சியை கட்டுப்படுத்தும்:

உடல் வறட்சியை கட்டுப்படுத்த கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த உடல் வறட்சி என்பது உங்கள் உடலில் இல்லாமல் இருப்பதால் தான் உற்ற நேரத்தில் உங்கள் குழந்தை பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தசைப்பிடிப்பை போக்கும்:

உங்கள் கர்ப்பகாலத்தின் போது உடல் அளவில் பல மாற்றங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. அதிக உடல் எடை மற்றும் ஹார்மோன்களால் உங்கள் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு வலியும் உண்டாகிறது. இந்த பிரச்சனையை போக்க தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது.

நிறத்தை பாதுகாக்கும்:

கர்ப்பிணி பெண்கள் சருமத்தின் நிறமானது கர்ப்ப காலத்தில் மாறக்கூடும். இதனால், ஒருசிலர் சகித்துக்கொள்ள முடியாமல் கவலையுடன் இருப்பர். இந்த தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உங்கள் உடல் எப்போதும் மிளிரும் தன்மை நீங்காமல் இருந்திடும்.

எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்:

கர்ப்பிணி பெண்களுக்கு எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியமான ஒன்று. உங்களுக்கு மட்டுமல்லாமல்... உங்கள் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் உங்களிடம் இருத்தல் வேண்டும். கவலை வேண்டாம்... தர்பூசணி பழம் சாப்பிடுவதால் தேவையான எதிர்ப்பு சக்தியானது உங்களுக்கு கிடைக்கிறது.

மலச்சிக்கலை போக்கும்:

கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் உண்டாவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், தேவையற்ற அசுத்தங்களை சுலபமாக நீக்கி, உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்கிறது இந்த தர்பூசணி பழம். ஆம், தர்பூசணியில் நார் சத்து இருப்பதால்... மலச்சிக்கலை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

சூட்டை தணிக்கும்:

கர்ப்பக்காலத்தில் உங்கள் உடலானது மிகவும் சூடாக இருந்திடும். குளிர்ச்சியான தன்மைக்கொண்ட தர்பூசணி பழம், உங்கள் தேக சூட்டை தணிக்க பெரிதும் உதவுகிறது.

சிறுநீர்ப்பை தொற்றுநோய்யை குணப்படுத்தும்:

கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையில் இந்த பிரச்சனை வருவது வழக்கம் தான். இருப்பினும், இந்த பிரச்சனையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க தர்பூசணி உதவுகிறது.

கண் பார்வையை மேம்படுத்தும்:

தர்பூசணியில் பீட்டா கரோட்டின் இருப்பதால் வைட்டமின் ஏ ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. இது உடம்பில் இருக்கும் நச்சை நீக்கி, ஆரோக்கியமான பார்வையை தருகிறது. தர்பூசணி பழம் கருவிழியையும் பாதுகாக்கும்.

கருவில் உள்ள குழந்தையின் எலும்புக்கு உதவும்:

தர்பூசணியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால்... உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வித்திடுகிறது. 

அதனால் கர்ப்பிணிகள் உங்கள் உணவு முறையில் தர்பூசணியையும் சேர்த்து கொண்டு தினம் தினம் பயனடையலாம்.

நண்பர்களே!
உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க... 
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon