Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பிணிகளுக்கு மூச்சு பயிற்சி முக்கியம் தானா?

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்கு ஆதாரமாக... சரியான உணவும், வழக்கமான உடற்பயிற்சியும், மன அழுத்தமற்ற மனமும் இருக்கிறது. நகரத்தில் வாழும் கர்ப்பிணி பெண்கள் சாலையின் போக்குவரத்து நெரிசல் போன்ற மனதை கொள்ளக்கூடும். இதனால், எங்கிருந்து அமைதி உங்களுக்கு கிடைக்குமென தேடினால், யோகாவின் மூலம் கிடைக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான யோகாவாக இந்த பிராணயாமா என்னும் மூச்சு பயிற்சி விளங்குகிறது.

பிராணயாமா என்பது மூச்சை கட்டுப்படுத்தும் ஒரு யோகாவாகும். இந்த யோகாவின் மூலமாக ஆக்சிஜனை நாம் உள் இழுக்க கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறோம், பிராணயாமாவினால் தேவையான அளவு ஆக்சிஜன் நமக்கு கிடைக்கிறது. இந்த ஆக்சிஜன் தான் நம் கருவறையில் இருக்கும் குழந்தைக்கும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியில் சரிசமமான ஆக்ஜினை எடுத்துக்கொண்டு, அதே அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு வெளியாக... இதனால் நுரையீரல் வலிமையடைய, இரத்தமும் சுத்தமாகிறது.

பிராணயாமா செய்யும் முன்னர், டாக்டரிடம் பரிந்துரை செய்ய வேண்டியது அவசியமாகும். எந்தவித உடற்பயிற்சியையும் ஆலோசனை இன்றி நாம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பிராணயாமா செய்வதனால் உண்டாகும் ஐந்து நன்மைகள்:

1. பிராணயாமா செய்வதனால் ஆக்சிஜன் கிடைப்பதோடு, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. இதனால், உடலின் உள்ளுறுப்புகள் சிறந்த முறையில் செயல்படுகிறது.

2. கர்ப்பத்தின் போது பிராணயாமா செய்வதன் மூலம், நேர்மறை எண்ணங்கள் உண்டாகிறது. அத்துடன் எதிர்மறை எண்ணங்கள் எட்டி பார்ப்பதை தவிர்க்க இதனால், உங்கள் மனதுக்கு தேவையான அமைதியும், ஆற்றலும் கிடைக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர தொடங்குகிறது.

3. பிராணயாமா செய்வதன் மூலம் நிதானம் கிடைக்கிறது. இதனால் ஒரு பெண், சுக பிரசவத்துக்கு முற்றிலும் தயாராகிறாள்.

4. ஆக்சிஜன் தேவையான அளவு கிடைப்பதால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கு தேவையான இரத்த ஓட்டமானது சீரான முறையில் கிடைத்திடுகிறது.

5. மேலும், பிராணயாமா செய்வதால் உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குகிறது.

பிராணயாமா செய்வதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டியவை:

1. இணைய தளத்தில், பிராணயாமா எப்படி செய்ய வேண்டுமென பல காணொளிகள் இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் தயவு செய்து உங்கள் பார்வையை அதன் மீது செலுத்தாதீர்கள். முறையான யோகா நிபுணர் கொண்டு நீங்கள் பிராணயாமா கற்க வேண்டும். அதுதான் ஆக சிறந்தது. ஏனெனில், அனுபவமே அருமையான ஆசான். அதை உங்கள் கண்ணால் பார்த்து கன்பார்ம் செய்ய அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். வீடியோ பார்த்து செய்யாதீர்கள்.

2. பிராணயாமா செய்யும் போது உங்கள் உடல் அசைவுகளை கவனிக்க தவறாதீர்கள். ஒருவேளை, அது உங்கள் உடலுக்கு உகந்ததாக தெரியவில்லை என்றால் உடனடியாக நிறுத்தி விடுவது நலம்.

3. பிராணயாமா செய்யும் இடமென்பது வெட்ட வெளியாக காற்று காதலிக்கும் அளவுக்கு இருத்தல் வேண்டும். அடைத்த இடத்திலோ அல்லது டிவி ஓடும் இடத்திலோ செய்யக்கூடாது. செய்து முடிக்கும்வரை போனை அறவே தொடாதீர்கள்.

4. பிராணயாமா செய்வதற்கு முன்பு 3லிருந்து 4மணி நேரம் வரை உணவு இடைவெளி இருத்தல் அவசியம். அதிகாலையில் பிராணயாமா செய்ய பரிந்துரை செய்யப்படுவதோடு, மாசற்ற சூழ்நிலையும் உருவாகிறது.

5. பிராணயாமா செய்யும் போது... உங்களுடன் யாராவது இருத்தல் அவசியம். இல்லையேல், தவறான வழிமுறையினால் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகக்கூடும்.

பிராணயாமா செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

1. பிராணயாமா செய்யும் போது கபாலபாரதி செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த பயிற்சியில் வயிறு குலுங்கும் என்பதால் இதை தவிர்க்க வேண்டுகிறோம்.

2. பிராணயாமா செய்யும் கர்ப்பிணி பெண்கள், மூச்சை வெகு நேரத்துக்கு இழுத்து கொள்வதை தவிர்த்திடுங்கள். இதனால், உங்களுடைய மன அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

3. சாப்பிட்டவுடன் எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்வதை தவிர்க்கவும்.

4. பிராணயாமா செய்யும்போது சூர்ய நாடி மற்றும் பஸ்திரிகா செய்வதை தவிர்க்கவும். இந்த பயிற்சியின் போது வெப்பமானது அளவுக்கதிகமாக உடலில் உண்டாகிறது. இதனால், கர்ப்பிணிகள் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

5. அதேபோல், கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்கள் எவ்வித யோகாவும், பிராணயாமாவும் செய்யாதீர்கள்.

பிராணயாமாவின் மூலமாக கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. இருப்பினும், காலத்தின் நலன் கருதி., கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக முக்கியமாகும். இல்லையேல், உடல் வலி முதல் பலவித தேவையற்ற விளைவுகளை உடலளவிலும், மனதளவிலும் சேர்த்து உண்டாக்கிவிடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon