Link copied!
Sign in / Sign up
7
Shares

கர்ப்பிணிகளுக்கான நொறுக்குத் தீனிகள்..!!

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் கண்டதையும் சாப்பிடக்கூடாது என்பார்கள். குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது என்பது ஒரு புறம் இருந்தாலும் கர்ப்பிணிகளுக்கு நெஞ்செரிச்சல் போன்றவைகள் ஏற்படும். எனவே  என்ன சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு  ஒத்துக்கொள்ளும் மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். 

கர்ப்பிணிகள் தங்களின் உணவில் காய்கறிகள், நட்ஸ், தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஜங்க் ஃபுட், எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கவேண்டும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, போலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரே நேரத்தில் அதிக சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. 

மூன்றுவேளை உணவினை 6 வேளையாக பிரித்து உட்கொள்ளுங்கள். யோகர்டு எனப்படும் மணமூட்டப்பட்ட தயிர் தாய்க்கும், சேய்க்கும் அவசியமானது. இதில் உள்ள கால்சியம் சத்து கருக்குழந்தையின் பற்களின் எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. யோகர்டு உடன் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், விதைகள் போன்றவைகளை கலந்து உட்கொள்ளலாம்; அருமையான காலை உணவாக இது அமையும். 

உயர்தர ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள் அடங்கிய சாலட் போல செய்து சாப்பிடலாம். தக்காளி, வெள்ளரி, வேகவைத்த ப்ருகோலரி, செலரி, இனிப்பு மக்காச்சோளம், இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவைகளை நாளுக்கு இரண்டு என்ற வகையில் சாலட் செய்து சாப்பிடலாம். கர்ப்பிணிகளுக்கு காரட் உயர்தர ஆகாரமாகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் குழந்தைகளுக்கு ஏற்றது. இது ஆரோக்கியமானதோடு கர்ப்பகால மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. 

காரட்டினை நறுக்கியோ, துருவியோ வைத்துக்கொண்டு அவ்வப்போது ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம். கடலைப் பருப்பு கர்ப்பிணிகளுக்கு ஏற்ற சத்தான உணவு. இதனை லேசாக வறுத்து சாப்பிடலாம். வெல்லம், ஏலக்காய் சேர்த்து பர்பி போல சாப்பிடலாம். எளிமையான சத்து நிறைந்த உணவு இது. 

பாதம் பருப்பில் வைட்டமின் இ, ப்ளேவனாய்டுகள் காணப்படுகின்றன. அதேபோல் வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. முந்திரிப்பருப்பில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செலினியம் போன்றவை காணப்படுகின்றன. இவை அனைத்துமே கர்ப்பிணிகளுக்கும், கரு குழந்தைக்கும் ஏற்ற உணவாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon