Link copied!
Sign in / Sign up
12
Shares

கர்ப்பிணிகளுக்கான கீரை சூப் தயாரிப்பது எப்படி?

காய்கறியில் இருப்பது போல் வேறு எதிலும் பெரும்பாலான சத்துக்களை நம்மால் காண முடியாது. அதற்கு முன்னுதாரணம் முருங்கை மரம். இதன் காய்களில் பெருமளவில் சத்துக்கள் இருக்க நான் மட்டும் சளைத்தவனா என பார்க்கிறது இதன் இலைகள். முருங்கை கீரையை மீன் குழம்புக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போல் ருசியான ஒரு உணவை வேறு எங்கும் பார்க்க இயலாது. அட ஆமாங்க, மீன் குழம்பு சாதத்தை பிசைந்து முருங்கை கீரை கூட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் நாவிற்கும் நகம் முளைத்து உங்களை போட்டு தினமும் நச்சரிக்கும். வேண்டுமென்று...

ஒரு சிலர் முருங்கை கீரையை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதும் உண்டு. சிலர், முருங்கை கீரையில் மீன் குழம்பை குழப்பி அடிப்பதுமுண்டு. இவை எல்லாம், நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிட வேண்டிய ஒரு உணவாக அமைய, நாம் இப்போது பார்க்க போவது கர்ப்பிணிகளுக்கான முருங்கை கீரை சூப் பற்றியே ஆகும்.

முருங்கை கீரை இலை சூப் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:

முருங்கை இலைகள் - 2 கப் (நறுக்கியது)

வெங்காயம் - கால் கப் (நன்றாக நறுக்கியது)

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)

தக்காளி - கால் கப் (நறுக்கியது)

சீரகம் - 1 டீ ஸ்பூன் 

மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன் 

கருமிளகு தூள் - 1 டீ ஸ்பூன்

தண்ணீர் - 4 கப் (தேவைக்கேற்ப)

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - அரை டீ ஸ்பூன் 

செய்முறை:

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு எண்ணெய்யை சுட வைத்து சீரகத்தை அந்த கடாயில் போடவும். சீரகம் நன்றாக வெடித்து வரும் வேளையில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். அதன் நிறம் தங்க பழுப்பு நிறத்தில் இருக்க, அத்துடன் பச்சை வாடையும் போய் இருக்கிறதா என்பதை பாருங்கள்.

அதன்பின்னர், வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்க விடுங்கள். 

பின்னர், தக்காளி, முருங்கை கீரை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்த பின்னர், சில நிமிடங்கள் மூடி வைத்திருக்கவும்.

அதன்பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக வடிக்கட்ட வேண்டும். அவ்வளவு தான், மிளகை தூவினால், முருங்கை கீரையினால் தயாரிக்கப்பட்ட சூப் ரெடி. லேசாக முருங்கை இலைகளை கடைசியாக தூவ மறந்து விடாதீர்கள்.

இதனை சுட சுட எடுத்து சிற்றுண்டிகளுக்கும், ரொட்டி வகைகளுக்கும், அப்பத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த முருங்கை கீரை சூப், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துள்ள திரவ உணவாக அமைகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon