Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்பிணிகளின் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும்..!

கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டமாகும்; இந்த நாட்களில் அதாவது குழந்தை தன் வயிற்றில் உண்டான அந்நொடி முதல் குழந்தையை பிரசவித்து கையில் ஏந்தும் அந்தத் தருணம் வரை கர்ப்பிணியின் மனது பலவித சந்தேகங்களுடனேயே பயணிக்கிறது. அப்படி கர்ப்பிணிகளின் மனதில் உண்டாகும் சந்தேகங்கள் என்னென்ன, அச்சந்தேகங்களுக்கான, மருத்துவரின் பதில்கள் என்னென்ன என இப்பதிப்பில் படித்தறிவோம்..!!

கர்ப்பகாலத்தில், எடை கூடி விடக்கூடாது என்பதற்காக கார்போஹைட்ரேட்டுகள் அதிகமிருக்கும் உணவுகளை குறைத்து விட்டு புரதம் அதிகமுள்ள உணவுகளை மட்டும் உண்ணலாமா?

"இது முற்றிலும் தவறான செயல்.. கர்ப்பகாலம் என்பது வயிற்றிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான, சத்தான உணவுகளை உண்ண வேண்டிய காலமே தவிர, உடல் எடையை கவனம் கொண்டு உணவைக் குறைக்கும் காலமல்ல..! வயிற்றில் இருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கும், உடலின் இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் மூளைச்செல்களின் இயங்கு சக்திக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மிக அவசியம்;  கர்ப்பகாலத்தில் கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலும் தவிர்த்தால், கர்ப்பகால மலச் சிக்கல், காலைநேர பலவீனம் போன்ற அவதிகளுக்கு உள்ளாவீர்கள்; ஆகையால், உடல் எடை குறைப்பை குழந்தை [பிறந்தபின் பார்த்துக் கொள்ளலாம்; இப்பொழுது குழந்தைக்கு தேவையான ஆரோக்கியமான அனைத்து உணவுகளையும் உண்ணத் தொடங்குங்கள்...!"

கர்ப்பகாலத்தில், கார சாரமான உணவுப்பொருட்களை உண்பது சரியா?

“கர்ப்பகாலத்தில், காரசாரமான உணவுப்பொருட்களை உண்ணக்கூடாது என்பதில்லை; ஆனால், இவ்வாறு உண்பதால், உங்களுக்கு நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பின் நீங்கள் தாராளமாய் உண்ணலாம்..! இந்த உணவுகளில் வாசனைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்களான சீரகம், மிளகு, சோம்பு போன்ற வாசனைப்பொருட்களில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இவ்வுணவுகள் ஒருவகையில் ஆரோக்கியமானதே; ஆனால் அதிக காரமும் எண்ணெயும் வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும் என்பதால் முடிந்தவரை எண்ணெய் மற்றும் காரத்தைக் குறைப்பது நல்லது.”

கர்ப்பகாலத்தில் கடை உணவு புடாய்சனிங் மற்றும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

“கடை உணவுகளால் உங்களுக்கு புட்பாய்சன் ஆகிவிட்டால், அது உங்களுக்கே ஆபத்து; உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். இது குழந்தையையும் பாதிக்கும் அபாயம் உண்டு; ஆகையால் புட்பாய்சனிங் ஏற்பட்ட உடனேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது."

கர்ப்பகாலத்தில், இரத்த சர்க்கரையின், இன்சுலின் அளவு (அ) உப்பின் அளவு திடீரென கூடுவதேன் ?

“கர்ப்பிணிகளில் சிலருக்கு உடல் பருமன் அல்லது மரபியல் காரணங்களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலாம் இல்லையேல் குறையலாம்; மரபியல் காரணமாக இருந்தால், இது கருவிற்கும் பரவும் அபாயமுண்டு; கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பரவும்போது தான் குறைப்பிரசவம், கருப்பையில் குழந்தை இறந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன."

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon