Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பிணிகளின் இரத்த அழுத்தம் உயரத்திலா?

உயர் இரத்த அழுத்தம் என்பது 140/90 mm Hgக்கு அதிகமாக இருப்பதாகும். இந்த நிலையை ஒரு கர்ப்பிணி பெண் அடையும்போது சில பிரச்சனைகளை இதனால் சந்திக்கிறாள். உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு கர்ப்பிணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், சில சமயத்தில்... தாய் மற்றும் குழந்தையை இந்த உயர் இரத்த அழுத்தம் பாதிக்கிறது. 

என்னவெல்லாம் உண்டாகும்:

கர்ப்பிணிகளின் உயர் இரத்த அழுத்தத்தினால் 

1. உடல் எடை அதிகரிக்கும்

2. நிலையுடன் இருக்க அவர்கள் மனம் விரும்பாது

3. என்ன செய்கிறோம் என்பதை புரியாது செய்வார்கள்

4. முதல் முறை கர்ப்பமாக இருப்பது போன்ற உணர்வு கூட ஒரு தாய்க்கு ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்:
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம்:

ஒரு சில பெண்கள், கர்ப்பமாகும் முன்னே இந்த இரத்த கொதிப்புடன் காணப்படக்கூடும். இதனை தான் நாள்பட்ட இரத்த அழுத்தம் என்கின்றனர். கர்ப்பத்தின் முதல் 20 வாரமும் காணப்பட தொடங்கும் ஒரு இரத்த அழுத்தம் தான் இந்த நாள்பட்ட உயர் இரத்த அழுத்தமாகும்.

கர்ப்ப கால இரத்த அழுத்தம்:

கர்ப்பத்தின் 20 வாரம் கழித்து வளரும் ஒரு இரத்த அழுத்தம் தான் இந்த கர்ப்ப கால இரத்த அழுத்தமாகும். இந்த பிரச்சனை குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு குட்பை சொல்லி கிளம்பிவிடவும் கூடும். 

நாள்பட்ட உயர் இரத்த அழுத்தத்துடன் கூடிய ப்ரீ - எக்லம்ப்ஸியா:

கர்ப்பமாக இருப்பதற்கு முன்பே ஒரு பெண் நாள்பட்ட இரத்த அழுத்தத்தை கொள்ள, தன்னுடைய சிறுநீரில் புரதம் வெளியேறுவதையும் காண்கிறாள்.

கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டிய நார்மல் இரத்த அழுத்த அளவு:

கர்ப்ப காலத்தில் இருக்கும் நார்மல் இரத்த அழுத்தத்தின் அளவாக 120/80 mm Hg இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டிய உயர் இரத்த அழுத்த அளவு:

இரத்த அழுத்தமானது 140/90 mm Hgயாக இருந்தால்...  அது தான் கர்ப்ப காலத்தின் உயர் இரத்த அழுத்த அளவாகும். 

கர்ப்ப காலத்தில் குறைந்த இரத்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள்:

1. தலைவலி

2. தலைச்சுற்றல்

3. குமட்டல்

4. மயக்கம் வருவது போன்ற உணர்வு

5. குளிரும் நிலை, தோல் ஈரத்துடன் காணப்படுதல்.

கர்ப்ப காலத்தில் உங்களுடைய இரத்த அழுத்தத்தை கணக்கிடுவது எப்படி?

1. மருந்தகங்களில் கிடைக்கும் இரத்த அழுத்த பரிசோதனை கருவியை வாங்கி கொள்ளலாம். இது நம் கைகளில் மாட்டும் பெல்ட் போல் இருக்கும். ஒருவேளை, வீட்டில் இருந்து பரிசோதிப்பது சந்தேகமாக இருந்தால்... டாக்டரிடம் சென்று அவர் மூலமாக இரத்த அழுத்தத்தை சோதனை செய்வது மிக நல்லது.

2. இரத்த அழுத்த நிலையின் அளவை சரியான முறையில் கண்டுபிடிக்க, தினமும் நாம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதே நேரத்தில், அதே கையில் சோதனை செய்ய வேண்டியதும் அவசியம்.

3. ஒருவேளை உங்களுக்கு உயர் அல்லது குறைவான இரத்த அழுத்தம் இருப்பதாக சந்தேகம் கொண்டால், உடனடியாக டாக்டரை சென்று பார்ப்பது தான் சிறந்த யோசனையாக அமைகிறது. நீங்களாக எதையும் தவறாக புரிந்துக்கொண்டு தவறான மருத்துவத்தை நீங்களாகவே கைகளில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ப்ரீ - எக்லம்ப்ஸியா என்றால் என்ன?

இந்த நிலையின் இறுதிக்கட்டமாக உங்களுடைய சிறுநீரகம் மற்றும் மூளைக்கூட பாதிக்கப்படலாம். இந்த ப்ரீ - எக்லம்ப்ஸியாவை, கர்ப்பத்தின் நச்சுக்குருதி (அ) கர்ப்பத்தினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைப்பர். இந்த கர்ப்பத்தின் நச்சு குருதியின் அறிகுறிகளாக கீழ்க்காணும் சில இருக்கிறது.

1. சிறுநீர் மாதிரியில் புரதம் சேர்ந்து இருக்கும்

2. கை மற்றும் 'கால்களில் அசாதாரண வீக்கம் காணப்படும்

3. தொடர் தலைவலி இருக்கும்.

 

 

கர்ப்பிணிகளே, கர்ப்ப காலத்தில் உங்களுடைய இரத்த அழுத்தத்தை தொடர்ந்து சோதனை செய்வது என்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடியது. எனினும், முறையான சோதனை மிக அவசியம். தேவையற்ற  விஷயங்களுக்கு டென்சன் ஆவதை தவிர்த்திடுங்கள். உங்கள் கர்ப்ப காலத்தில்... முடிந்த அளவுக்கு டாக்டரிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி செயல்படுங்கள். வீட்டில் இரத்த அழுத்தத்தை சோதனையிட்டு குறைந்திருந்தாலோ...அல்லது அதிகமாக இருந்தாலோ... உடனே கவலைக்கொள்ளாமல் ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்யுங்கள். குழப்பம் இருக்குமெனில், தாமதிக்காமல் டாக்டரை சென்று பாருங்கள். டாக்டரின் ஆலோசனைக்கேற்ப இரத்த பரிசோதனை கருவியை சிறந்ததாக வாங்குவதும் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon