Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பிணிகளின் கவனத்திற்கு

கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய கடினமான காலமாகும். இந்த கால கட்டத்தில் பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உணவு முறை, உறக்க நிலை என  அனைத்திலும் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
உணவு

மகப்பேரு காலத்தின் போதும் மற்றும் தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு உணவு உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு சாப்பிட்டால் போதுமென நினைக்காமல், கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கு அதிகப் புரதம், வைட்டமின், நார்ச்சத்து தேவை. பிரெட் உள்ளிட்ட மைதா பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இது மலச்சிக்கல் உண்டாவதைத் தவிர்க்கும். முழு பருப்பு வகைகள், முளை கட்டின பருப்பு வகைகள் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். பால், இறைச்சி, முட்டை போன்ற உணவுகளை எடுத்தும் கொள்ளலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக அதிகளவில் உட்கொள்ளலாம். பழத்தைச் சாறாக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து இல்லாமல் போய்விடும். எனவே, பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும். மதுவகைகள் மற்றும் புகையிலை போன்றவை உட்கொள்ளக்கூடாது.

உணவுக்கு முன்னும் மற்றும் பின்னும் தேனீர் மற்றும் காபி போன்ற பானங்கள் உட்கொள்வதினால் உணவில் உள்ள இரும்புச் சத்தானது கிடைப்பது இல்லை. எனவே மேற்கூறிய பானங்களை உணவிற்கு முன்னும் பின்னும் தவிர்ப்பது மிக அவசியம்.

உடற்பயிற்சி

கர்ப்பிணி பெண்களுக்கு நடைபயிற்சி மற்றும் பிற தேவையான உடல்பயிற்ச்சி தேவை. அதிக வேலைகள் செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கடைசி மாதத்தில் தவிர்க்க வேண்டும்.

சுகப் பிரசவத்துக்கு 8 மாதம் வரை வீட்டில் இருந்தபடியே சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம். தினமும் காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது நல்லது. கர்ப்ப காலத்தில் கடினமான வேலைகள், அதிக எடை தூக்காமல் இருப்பது நல்லது. சிசேரியன் ஆன பிறகு, குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, வலிப்பு போன்ற கோளாறுகள் இருந்தால், அவசியம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பொதுவாக, கர்ப்பிணிகளுக்குப் பிரசவத்தின்போது வயிற்றைச் சுத்தம் செய்ய எனீமா கொடுத்தால், மலக்குடல் கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படும். வயிற்றில் உள்ள ஜீரணமாகாத உணவு வெளியேற்றப்படாது. பிரசவ நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கட்டாயத்தின் பேரில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இது தவறு. மருத்துவர்களின் அறிவுரையின் பேரிலேயே உணவு உட்கொள்ள வேண்டும்.

மருந்து

பரிந்துரை செய்யப்பட்டபோது மாத்திரம் மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் கர்ப்ப காலத்தில் 14-16 வாரங்கள் தொடங்கி தாய்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரை இரும்புச் சத்து, போலேட் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை கூடுதலாக தொடர்ந்து அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கர்ப்பிணியும் கட்டாயம் ஃபோலிக் அமில மாத்திரையை, கர்ப்பமான நாளிலிருந்து 12 வாரங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தைக்கு ஏற்படும் பிறவித் தண்டுவடக் குறைபாடுகளைத் தவிர்க்கும். இந்த மாத்திரை எல்லா ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?

பலருக்கும் உள்ள பொதுவான சந்தேகம், முதல் சிசேரியன் ஆன பிறகு, அடுத்து சுகப் பிரசவம் சாத்தியமா என்பதுதான். சிலருக்குச் செங்குத்தாகத் தோலைக் கிழித்து சிசேரியன் செய்தால், அடுத்து சுகப் பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என முடிவுக்கு வந்துவிடுகின்றனர். சிசேரியனின்போது தோல் எவ்வாறு கிழிக்கப்படுகிறது என்பது முக்கியம் அல்ல. உள்ளே இருக்கும் கர்ப்பப்பை எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

முதல் பிரசவத்தில் கர்ப்பப்பை குறுக்கே வெட்டி தையல் போடப்பட்டிருந்தால், அடுத்த சுகப் பிரசவம் செய்வது சுலபம். செங்குத்தாக வெட்டப்பட்டுத் தையல் போட்டிருந்தால், அடுத்த பிரசவத்தில், தையல் பிரிய வாய்ப்பு உள்ளது. சிசேரியனில் கர்ப்பப்பையை எவ்வாறு கிழிப்பது என்பது, குழந்தையின் தலை இருக்கும் திசை மற்றும் நிலையை ஸ்கேனில் பரிசோதித்த பிறகுதான் சொல்ல முடியும். எனவே, சிசேரியன் என்றாலே தவறான விஷயம் என்று எண்ண வேண்டாம்.

யாருக்கு சிசேரியன் தேவை என்று மருத்துவர் முடிவு செய்வார். மருத்துவர் வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றி, டயட், உடற்பயிற்சி பின்பற்றினால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதையும் மீறி, குழந்தையின் நிலை மாறும்போது, சிசேரியன் செய்யத் தயங்க வேண்டாம். இதன் மூலம், தாய் - சேய் இருவரது உயிரையும் பாதுகாக்க முடியும்.

சிசேரியனுக்கு பிறகு எவ்வளவு நாள் கழித்து உறவு வைத்துக்கொள்ளலாம்?

சிசேரியனுக்குப் பிறகு குறைந்தது 6 வாரங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எல்லா தம்பதியரும் காண்டம் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், இதைச் செய்யாததால், சிசேரியன் ஆன நான்கே மாதங்களுக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிடுகின்றனர். பொதுவாக, கர்ப்பிணிகள் தீர்மானிக்கப்பட்ட சிசேரியனுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. பிளசன்டா ப்ரெவியா போன்ற அதீத ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon