Link copied!
Sign in / Sign up
6
Shares

கர்ப்பிணிகளே! நீங்கள் செய்யக்கூடாத 9 முக்கிய விஷயங்கள்..!

கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைத்த மிகச்சிறந்த வரமாகும். இக்கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கர்ப்பகாலத்தில் பெண்கள் ஒருசில விஷயங்களை செய்ய வேண்டியதும் மற்றும் ஒருசில விஷயங்களை முக்கியமாக செய்யமல் இருப்பதும் அவசியம்...

கர்ப்பகாலம் என்றாலே, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என ஆளுக்கு ஆள் ஒவ்வொரு அறிவுரைகளைக் கூறுவார்கள். கடைசியில் நீங்கள் குழம்பித் தவிப்பது தான் மிஞ்சும். கர்ப்பகாலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற குழப்பம் அனைத்து கர்ப்பிணிகளுக்குமே இருக்கும். அக்குழப்பங்களை தீர்ப்பதற்கே இப்பகுதி..! கர்ப்பகாலத்தில் என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பது பற்றி இப்பகுதியில் அளித்துள்ளோம். படித்து பயனடையுங்கள்.

தீய பழக்கங்கள்

கர்ப்ப காலத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் என இருந்தால், அது குழந்தையை பாதிக்கும். குழந்தைகள் உடல் ஊனத்துடனோ இல்லையேல் மனநிலை பாதிப்புடனோ பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், குழந்தைகளுக்கு நடத்தை பிரச்சனைகள், குறைவான பிறப்பு எடை, கற்றல் குறைபாடுகள் மற்றும் போதிய வளர்ச்சி இல்லாமை போன்றவை ஏற்படலாம். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் இவற்றை கைவிட வேண்டுமெனில், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்; இது நலம் பயக்கும்.

காஃபின்

காஃபின் நஞ்சுக்கொடியின் வாயிலாக குழந்தைக்குள் ஊடுருவி, குழந்தையின்  இதயத்துடிப்பை பாதிக்கும்; இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். எந்த அளவுக்கு அதிகமாக காஃபின் உட்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்காக நீங்கள் முற்றிலுமாக காஃபினை தவிர்க்க வேண்டும் என்றில்லை. ஒரு நாளைக்கு 200மிலி குறைவாக பருக வேண்டும். இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

கழிவு

இது விசித்திரமாக இருக்கலாம்; பலரும் அறியாத ஒன்று. வீட்டில் பூனை இருந்தால், அதன் கழிவுகளை நீங்கள் சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில், அதில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளன; டோக்ஸோபிளாஸ்மா கான்டி எனும் ஒட்டுண்ணி உள்ளது. உடல் உபாதைகள் தீவிரமாகும் வரை, உங்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதே தெரியாது. இதனால் குழந்தை இறந்து பிறத்தல், கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஃபேஷன்

கர்ப்பகாலத்தில் உங்களது உடலின் வளர்ச்சி அதிகரித்திருக்கும்; நீங்கள் முன்பு அணிந்திருந்த உடைகள் தற்போது சரியாக இருக்காது. எனவே நீங்கள் புதிய இலகுவான உடைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது. கர்ப்பகால ஆடைகள் முன்பு போல இல்லை..! இப்போது டிரெண்டியாகவும் ஃபேஷனாகவும் உள்ளது; எனவே இவ்வுடைகள் கர்ப்ப காலத்தில் நீங்கள் அழகாக வலம் வர உதவியாக இருக்கும்.

செருப்புகள்

ஹீல்ஸ் வைத்த செருப்புகளை, அதிகம் அணியும் ஆர்வம் உடையவர்களாக இருந்தால், இதனை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் ஹீல்ஸ் செருப்புகள் சரியான தேர்வாக இருக்காது; எனவே தரையோடு தரையாக இருக்கும் ஃபிளாட் செருப்புகளை பயன்படுத்துவது நல்லது.

மருந்துகள்

மருத்துவ அனுமதியில்லாமல், நீங்கள் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்; தலைவலிக்கிறது, காய்ச்சலாக இருக்கிறது, ஜீரண பிரச்சனை இருக்கிறது என நீங்களே ஏதேனும் ஒரு மருந்தை உட்கொள்வது கூடாது.

குப்புறப்படுத்தல் 

குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், குப்புறப்படுக்கவே கூடாது; இவ்வாறு செய்தால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகும். இரத்த ஓட்டம் தடையாகும் வாய்ப்புள்ளது.

பரிசோதனை

மருத்துவர் குறிப்பிட்டுக் கொடுத்த நாட்களில், மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். மருத்துவர் கூறும் பரிசோதனைகளை செய்வதன் மூலமாக, குழந்தையின் ஆரோக்கியம் பற்றி அறியலாம். ஒருவேளை குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தால் கூட, அதனை சரி செய்து விடலாம்; எனவே மருத்துவர் சந்திப்பையும், பரிசோதனைகளையும் தவறாமல் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

சாப்பிடாமல் இருப்பது!

கர்ப்ப காலத்தில் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க கூடாது. விரதம், டயட்  எனும் பெயர்களால், வயிற்றை, குழந்தையை பட்டினி போடக் கூடாது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon