கர்ப்பிணிகளே! கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..!
கர்ப்பகாலத்தில், கர்ப்பிணிகளின், கர்ப்பப்பையின் தோழனாய் திகழ்வது இளநீர்; கர்ப்பிணிகள் இளநீரை கர்ப்பகாலத்தில் பருகுவது அவர்களுக்கும், அவர்களுள் வளரும் கருவிற்கு பெரும் நன்மை பயக்கும். சில கர்ப்பிணிகளுக்கு அதிகம் குமட்டல் ஏற்படுவதால், இந்த இளநீர் அருந்துவதாலும் சிக்கல் ஏற்படுகிறது. இளநீர் அருந்துவதில் உள்ள சிக்கலை போக்க, அதனை ஒரு புது வடிவத்தில் வழங்கவே, இந்த பதிப்பு..! கர்ப்பிணிகளே பதிப்பினை படித்து, பயனடையுங்கள்..!

தேவையானவை..

பனங்கற்கண்டு - 200 கிராம், இளநீர் - 2 (வழுக்கை பதம்), வறுத்த சேமியா 1 கைப்பிடி, நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை - தலா தேவைக்கேற்ப.

செய்முறை..

1. இளநீரையும், வழுக்கையையும் மின் அரைப்பானில், (மிக்ஸியில்) நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்

2. பனங்கற்கண்டை நீரில் கரைத்து, நன்றாக வடிகட்டிக் கொள்ளுங்கள்; முந்திரி, ஏலக்காய், திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள்

3. பாத்திரத்தில் சிறிது நீரைக் கொதிக்க விடவும்; அதனில், சேமியாவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
4. வறுத்த முந்திரி, ஏலக்காய், திராட்சையை கொதிக்கும் நீர் கலவையில், சேர்த்துக் கொதிக்க விடவும்
5. பின், பனங்கற்கண்டு, அரைத்த இளநீர் இரண்டையும் மேற்கூறிய கலவையில் சேர்த்து நன்கு கிளறி, பாயச பதத்தில் இறக்கி விடவும்; மேலும் உங்களுக்கு விருப்பமெனில், காய்ச்சிய ஆறிய பாலையும் பாயசத்தில் சேர்த்துக் கொள்ளலாம்
