Link copied!
Sign in / Sign up
5
Shares

கர்ப்பிணிகள் உடலுறவு பற்றி கொள்ளும் 7 குற்ற உணர்வுகள்...!

கர்ப்ப காலம் தொடங்கியது முதல் பெண்ணின் உடலில் மற்றும் மனதில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். கர்ப்பகாலத்தில், பெண்கள் பலவித உணர்ச்சி மாறுதல்களுக்கு உள்ளாவார்கள்; இந்த சமயத்தில் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கணவரையே சேரும். பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களால் பல அன்றாட செயல்களை அவர்களால் சரியாக செய்ய முடிவதில்லை. இவற்றை எண்ணி அவர்கள் அதிகமான குற்ற உணர்வுகள் கொண்டிருப்பர்.

மகப்பேறு காலத்தில், உடலுறவு பற்றி பெண்கள் கொள்ளும் 7 குற்ற உணர்வுகள் பற்றி, இப்பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்..!

1. மானம்.. மரியாதை..!

கர்ப்பம் தரித்த பெண்கள், அதிகம் குற்ற உணர்வு கொள்வது, பிரசவ நேரம் குறித்தே! தனக்கு பிரசவம் பார்ப்பது ஆணாக இருந்தால், தன் மானம்! மரியாதை.! மற்றும் பத்தினி தர்மம் என்னாவது என்று எண்ணி மிக வருந்துவர்.

2. கணவரின் விருப்பம்..!

கர்ப்பகாலத்தில், கணவரின் உடலுறவு விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று எண்ணி வருத்தம் கொள்கிறாள்; தான் நல்ல மனைவி அல்லவோ என்று குழம்பி குற்ற உணர்வு கொள்கிறாள்..!

3. பலவீனம்..

கர்ப்பகாலத்தில், பெண்கள் மிகவும் சோர்வடைந்து விடுவதால், பலவீனமாக உணர்வதால், கணவரையும் வீட்டையும் சரியாக கவனிக்க முடியவில்லையே என்ற எண்ணம் அவளை குற்ற உணர்வு கொள்ள செய்கிறது.

 

4. விரும்பிய நேரத்தில்..!

தம்பதியர் இருவருக்கும் எப்பொழுது விருப்பமோ அப்பொழுது உடலுறவு கொண்டு மகிழ்ந்திருப்பர்; ஆனால், இப்பொழுது அது முடியவில்லையே, கணவர் என்னால் தவிக்கிறாரே என்ற குற்ற உணர்வுகள் அவளை வாட்டி எடுக்கிறது.

5. கர்ப்பிணியின் ஆசை..!

சில சமயங்களில், கர்ப்பிணியான பெண்ணுக்கும் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வுகள் பொங்கி எழும்; அப்பொழுது நாம் ஒரு குழந்தையை சுமந்து கொண்டு இவ்வாறு எண்ணுகிறோமே என்றும், இதற்கு கணவர் உடன்பட மறுக்கையில் உங்களை கணவருக்கு பிடிக்கவில்லையோ என்ற வீணான குழப்பம் கொண்டு வருத்தம் கொள்ளத் தொடங்குகிறீர்.. கர்ப்பிணிகளே!

6. நினைவுகள்..!

உடலுறவு குறித்து எண்ணுவதை தடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு கர்ப்பிணிகளை கொலையாய் கொல்கிறது.

7. எப்பொழுது வரும்..!

பிரசவம் முடிந்து, குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆனால் தான், பெண்களால் பழைய உடல் பலத்தையும் அமைப்பையும் பெற முடியும். அந்த நாள் எப்பொழுது வரும் என்ற எண்ணமும் அவர்களின் மனதை குடைந்து கொண்டு இருக்கும்.

இது மாதிரியான பல குற்ற உணர்வுகளால், பெண்கள் வாடுகின்றனர்; ஆனால், இவை தேவையற்ற உணர்வுகள்; கர்ப்பிணிகளே! உடலோடு, மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், அதுவே ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு வழிவகுக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon