கர்ப்பகாலத்தில் பெண்கள் நல்ல சத்தான, ஊட்டச்சத்து அடங்கிய உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பிணிகள் உண்ணும் சத்தான உணவுகளால் தான், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் நிச்சயிக்கப்படுகிறது. எனவே, கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்காமல் உண்ண வேண்டிய முக்கிய 4 உணவுகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்..!!
1. பாதாம்..!

பாதாம் போலிக் அமிலம் நிறைந்த ஒரு பருப்பு வகை; இந்த அமிலம் நிறைந்திருப்பதால் இது கருவின் வளர்ச்சியை தூண்டக்கூடியது; ஆகையால், கருக்கலைப்பு உண்டாவதை தடுக்க வல்லது பாதாம். பால்டம், விட்டமின் B6 போன்ற சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளதால், இது கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
2. வாழைப்பழம்..!
வாழைப்பழத்தில் இரும்பு மற்றும் போலிக் அமிலச் சாது நிறைந்துள்ளது; இது ஹீமோகுளோபின் அளவைக் கூட்டி, கர்ப்பிணிகளில் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது கருவறையில் வளரும் குழந்தை மற்றும் கர்ப்பிணி இருவரின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இது செரிமான பிரச்சனைகளையும் கர்ப்பிணிகளின் உடலில் உண்டாகாமல் தடுக்கிறது. வாழைப்பழம் கர்ப்பிணிகளின் முதுகெலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
3. தயிர்..

தயிர் அதிக கால்சியம் சத்துக்களை கொண்டுள்ளதால், இது கர்ப்பிணி மற்றும் கருவின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இது கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் எரிச்சல் பிரச்சனைகளை அறவே நீக்குகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
4. சாலமன் மீன்..!

கர்ப்பிணிகள் சாலமன் மீனினை 4-5 முறைகள் கர்ப்பகாலத்தில் உட்கொண்டால், அது கருவின் IQ அளவை 2.8% அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுவதால், இது கருவின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது..!