Link copied!
Sign in / Sign up
6
Shares

கர்ப்பிணிகள் சந்திக்கும் தர்மசங்கடமான விஷயங்கள்..!!

பெண்கள் கர்ப்பம் தரித்த அந்தக் கணம் முதல், குழந்தையை பெற்று அதை வளர்க்கப்போராடி, குழந்தை தானாய் தன் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் நிலை வரும் வரை பெண்களின் வாழ்வு போராட்டமயமே! என்னதான் கணவன்மார்கள் மனைவிகளுக்கு உதவினாலும், அதெல்லாம் கடலில் கலந்த சிறு துளிபோல் மிகச்சிறிய உதவியே! பெண்கள் கர்ப்பம் அடைந்த அந்நாட்களில், வாந்தி, குமட்டல், உடல் முழுதும் அரிப்பு, மலச்சிக்கல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்; அப்படி கர்ப்பிணிகள் சந்திக்கும் மிகவும் தர்ம சங்கடத்திற்குரிய விஷயங்கள் சிலவற்றை இப்பதிப்பில் படித்தறியலாம்..!

வாயுத்தொல்லை

கர்ப்பத்தின் முதல் 3 மாத சுழற்சியில், வாயுத்தொல்லை பிரச்சனை அதிகரிக்கும்; இதனால் குடல் மற்றும் செரிமான செயல் திறன் குறைய ஆரம்பிக்கும். மேலும், கர்ப்பகாலத்தில், நீங்கள்எடுத்துக் கொள்ளும் வைட்டமின் மாத்திரைகளால், உடலில் வாயு அதிகரிக்கும்.

சிறுநீர்!

மாதவிடாய் சுழற்சி தடைபடுவதற்கு முன்னரே, கர்ப்பிணிகளிடம் சிறுநீர் அதிகரிப்பது ஓர் அறிகுறியாக தென்படும்; கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், இப்பிரச்சனை கர்ப்பகாலம் முழுதும் தொடரும். 

உலோக சுவை!

சில கர்ப்பிணிகளிடம் நாவில் உலோக சுவை தென்படும், இதற்கு அதிக ஈஸ்ட்ரோஜன் சுரப்பு காரணமாகலாம்; இது முதல் 3 மாத சுழற்சியின் போது அதிகம் தென்படலாம். இதனால் தான் உணவின் மீதான ருசி அல்லது ஆசை கர்ப்பிணிகளுக்குக் குறையும், இதன் காரணமாகவே 'தன்னால், எதுவுமே உட்கொள்ள முடியவில்லை' என்று கூறுவார்கள். 

எச்சில்!

கர்ப்பிணிகள் காலை எழுந்ததும் குமட்டல் ஏற்படுவதோடு, உடல்நலக்குறைபாடு, எச்சில் அதிகமாக சுரப்பதும் கூட கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் ஓர் தர்ம சங்கடமான அறிகுறியாகும். இது முதல் 3 மாத சுழற்சியின்போது தான் அதிகமாக இருக்கும்; இரண்டாம் 3 மாத சுழற்சி ஆரம்பிக்கையில் குறைந்து விடும்.

அரிப்பு!

எந்தவொரு காரணமும் இன்றி, உடலில் ஆங்காங்கே அரிப்பு ஏற்படலாம்; வயிறு மற்றும் மார்பக பகுதிகளில் அதிகம் அரிப்பு ஏற்படும், இந்த அரிப்பு அதிக ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் நிகழலாம்..! இது கர்ப்பிணிகளுக்கு நேரிடும் ஒரு தர்ம சங்கடமான விஷயமாகும்.

 
 
குமட்டல்!

கர்ப்பம் தரித்த நொடி முதல் குமட்டலானது பெண்டிரை பின் தொடர தொடங்கி விடும்; இது ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது. இதனால், மயக்கம் கூட ஏற்படலாம்..!

சளி!

கர்ப்பகாலத்தில்,  மூக்கடைப்பு, சளி போன்றவை ஏற்படலாம்; கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளின் உடலில், சளி அதிகம் உருவாக வாய்ப்புள்ளது; சில நேரங்களில் கண்களில் கூட நீர் வடியும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon