Link copied!
Sign in / Sign up
5
Shares

கர்ப்பிணிகள் ஒற்றை பக்கம் தலை வைத்து தூங்குவது சரியா?

கர்ப்பிணிகளுக்கு தூக்கம் என்பதுடன் தினமும் சண்டை போட வேண்டிய அசவுகரிய நிலை ஏற்படுவது வழக்கம் தான். எப்படி தூங்குவது? நிலை மாற்றி தூங்க, தன் கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வருமா? என பல வித யோசனைகளுடன் அவர்கள் இருப்பார்கள். நீங்கள் எப்போதும் தூங்கும் ஒரு நிலை என்பது கர்ப்ப காலத்தில் உகந்ததாக இருப்பதில்லை. அதனால், கர்ப்பிணிகளுக்கான ஒரு சில தூங்கும் நிலையை நாங்கள் இதோ தர முயல்கிறோம்.

கர்ப்ப காலத்தில் தூங்க சிரமப்பட காணப்படும் காரணிகள்...

1. வயிறு உப்புதல்

2. முதுகு வலி

3. நெஞ்செரிச்சல்

4. மூச்சு விடுவதில் சிரமம்

5. தூக்கமின்மை

கர்ப்பிணி பெண்கள் தூங்க வேண்டிய நிலைகள்:

கர்ப்ப காலத்தில் ஒருபக்கமாக நீங்கள் படுத்து தூங்குவது நல்லது. அதுவும், உங்கள் இடப்பக்கம் தலை வைத்து தூங்குவதால், இரத்தமும், ஊட்டச்சத்தும் அதிகரிக்க, உங்கள் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் சென்று சேரக்கூடும்.

உங்கள் கால்கள் மற்றும் முழங்கால்கள் வளைந்திருக்க வேண்டும். உங்கள் கால்களுக்கு இடையே தலையணை வைத்து படுப்பது நல்லது.

1. உங்கள் முதுகு வலிப்பது போல் உணர்ந்தால், ஒருக்கணைத்து (ஒரு பக்கமாக) படுத்து தூங்குவது நல்லது. அத்துடன் தலையணையை வயிற்றுக்கு கீழே வைத்தும் கொள்ளலாம்.

2. இரவில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், உங்கள் உடம்பின் மேல்பகுதியை தலையணை கொண்டு முட்டு கொடுத்திடலாம்.

இந்த பரிந்துரைகளும் மருத்துவர் ஆலோசனைக்கு இணங்க செய்தல் நலம். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தே அழுத்தம் என்பது அமையக்கூடும். ஒருவேளை, இதனால் உங்களுக்கு பயனளித்தாலும், முழுஇரவும் உங்களால் ஒரே நிலையில் இருந்திட முடிவதில்லை. எனவே திரும்பியும் படுத்து கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய தூக்க நிலை:
நேராக தூங்குதல்:

உங்கள் முதுகுப்பகுதி கீழ் இருக்க, மேலே பார்த்தவாறு தூங்குவது தான் நேராக தூங்குதல். இதனால் முதுகு வலி, மூச்சு தொந்தரவு, செரிமான பிரச்சனை, மூலநோய், குறைந்த இரத்த அழுத்தம் என உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் தடைப்படுகிறது.

குப்புறப்படுத்து தூங்குதல் :

உங்கள் முகம் தரையில் ஊன்ற, முதுகு பகுதியானது மேல் பார்த்து இருக்கக்கூடும்.

அப்போது, உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, வயிற்றின் நிலையும் மாறக்கூடும் என்பதால் வயிற்றை கீழே வைத்து தூங்குவது உங்களுக்கு கடினமாக இருந்திடும்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon