Link copied!
Sign in / Sign up
19
Shares

கர்ப்பிணிகள் கருவிற்கு செய்ய வேண்டியது என்ன?

பெண்கள் கருத்தரித்த அந்நொடி முதல், குழந்தை மண்ணைத் தொடும் வரை அதனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பர்; குழந்தை எப்பொழுது பிறக்கும்? எப்படி இருக்கும்? யாரைப்போல் இருக்கும்? எப்படி படிக்கும்? அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என பலவகை எண்ணங்கள் பெண்ணின், கர்ப்பிணியின் மனதை துளைத்துக் கொண்டிருக்கும். ஆனால், இத்தகு உணர்வுகளுக்கிடையிலும், கர்ப்பிணிகள் பிறக்கப்போகும் குழந்தைக்கு தான் ஆற்ற வேண்டிய காரியங்களை மறவாமல் ஆற்ற வேண்டும்..! 

அப்படி என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அதை இப்பதிப்பின் வாயிலாக நாங்கள் தீர்த்து வைக்கிறோம்..!

நன்றாக ஆரோக்கியமான உணவுகளை உன்ன வேண்டும்; உணவினைத் தவிர நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி இப்பதிப்பில் பார்க்கலாம்..!

கருவில் உள்ள குழந்தையை அறிவாகவும், ஆரோக்கியமாகவும் உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின், கர்ப்பிணியின், பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்கு எவ்வாறு கருவிலிருந்தே அறிவை ஊட்டி வளர்ப்பது என்று இங்கு படித்தறியுங்கள்..!

படிப்பது..!

கர்ப்பகாலத்தில் தினமும் சிறிது நேரத்தையாவது, புத்தகம் படிக்க செலவிட வேண்டும்; ஒரு நல்ல புத்தகத்தை படியுங்கள். தாய் ஒரு புத்தகத்தை படிப்பதால், கருவிலுள்ள குழந்தையும் அறிவை பெறும்.

பாடுவது..

கர்ப்பகாலத்தில் பாடுவது, உங்களது மனதை அமைதியுற செய்ய உதவும். மேலும் இது குழந்தையின் மூளையையும் கூட அறிவுப்பூர்வமானதாக மாற்றும்.

பேசுவது..!

கர்ப்பகாலத்தில் நமது மனதில் தோன்றும் எண்ணங்களும், நமது காதுகளில் விழும் வார்த்தைகளும், அடுத்தவர்களிடம் பேசும் வார்த்தைகளும் நல்லதாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள், குழந்தைக்கு கருவில் கற்பிக்கும் வாழ்க்கை பாடமாகும்.

மசாஜ்..!

நீங்கள், உங்களது வயிற்றினை மசாஜ் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பகாலத்தில், மசாஜ் செய்து விடுவதால் குழந்தைகளின் தொடு உணர்வு அதிகரிக்கும்.

சிரிப்பு..!

கருவில் குழந்தை இருக்கும் போது, பெண்கள் எப்போது சிரித்துக்கொண்டே சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். தேவையில்லாத விஷயங்களை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக்கொண்டு இருப்பது கண்டிப்பாகக் கூடாது; இது குழந்தையை பாதிக்கும்.

உலாவுதல்..

கர்ப்பிணிகள் அடிக்கடி வெளியில் இயற்கை நிறைந்த இடங்களுக்கு சென்று வர வேண்டும். பசுமையான இடங்கள், கடற்கரை போன்ற இடங்களில் மாற்றங்களை உணர முடியும். அது மட்டுமின்றி தாயின் மனதும் வெளியில் சென்று வருவதால் அமைதியடைகிறது.

உணவு..!

 

குழந்தை கருவறையில் இருக்கும் போது தாய் பசியுடன் இருப்பது மிகவும் தவறு. தேவையான சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக தான், உங்களது குழந்தையை, உங்களால் சிறப்பாக பெற்றெடுக்க முடியும். அதிக பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகள் என வகை வகையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon